Ajith's World Tour – சார் முன் வாசல் வழியா வராதீங்க பின் வாசல் வழியா வாங்க – அஜித்துக்கே இந்த நிலைமையா?

சென்னை: Ajith’s World Tour (அஜித்குமாரின் உலக சுற்றுப்பயணம்) அஜித் செய்திருக்கும் வேர்ல்ட் டூரின்போது அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து தெரியவந்திருக்கிறது.

துணிவு படத்தில் நடித்து முடித்திருக்கும் அஜித் அடுத்ததாக தனது 62ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்குகிறார். பல மாதங்கள் படத்தின் பெயர் சொல்லப்படாமல் இருந்த சூழலில் கடந்த 1ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு பெயர் அறிவிக்கப்பட்டது. படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.

அஜித் ஆரம்பித்த டூர்: ஏகே 62வை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் வெளியேற மகிழ் திருமேனி உள்ளே வந்தார். எனவே இந்தப் படத்தை தரமானதாக கொடுக்க வேண்டும் என நினைத்து கதையை இறுதி செய்தவற்கு நேரம் எடுத்துக்கொண்டார். எனவே படம் தொடங்க தாமதமானதால் ஏற்கனவே திட்டமிட்டிருந்த தனது வேர்ல்ட் டூரை அஜித்குமார் தொடங்கினார். இது அவரது முதல்கட்ட சுற்றுப்பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

நேபாளம், பூடான்: இதனையடுத்து நேபாளம், பூடான் உள்ளிட்ட பகுதிகளில் பைக் ரைட் செய்தார் அஜித்குமார். அங்கும் அவரை பலர் அடையாளம் கண்டுகொண்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும், அவரை ரசிகர் ஒருவர் பின் தொடர்வது போன்றும், அஜித் செஃப் உடையில் சமைப்பது, பல இடங்களில் அவர் மின்னல் வேகத்தில் ரைட் செய்தது போன்ற வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகின.

ஆவணப் படமாகிறதா ரைட்?: இதற்கிடையே அஜித்தின் முதல் கட்ட சுற்றுப்பயணம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அது நிச்சயம் ஆவணப் படமாக வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகின. அதுவும் அந்த ஆவணப் படமானது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல் கசிந்து ரசிகர்களை குஷிப்படுத்தியது. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என ரசிகர்களில் ஒருதரப்பினர் கூறிவருகின்றனர்.

அடுத்தக்கட்ட பயணம் எப்போது?: இந்தச் சூழலில் அஜித்தின் முதல் கட்ட சுற்றுப்பயணம் கடந்த 8ஆம் தேதியோடு முடிவடைந்தது. தொடர்ந்து, அவர் எங்கெல்லாம் பயணம் செய்தார் என்ற மேப்பை சுரேஷ் சந்திரா வெளியிட்டு, அடுத்தக்கட்ட பயணத்தை நவம்பர் மாதம் தொடங்குவார் என அறிவித்திருந்தார். விடாமுயற்சியின் ஷுட்டிங்கும் மே 22ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. இதில் அஜித் கலந்துகொண்டு தனது போர்ஷனை முடித்துக்கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Here is the details about ajithkumars world tour

அஜித்தின் அனுபவங்கள்: இந்நிலையில் முதல் கட்ட வேர்ல்ட் டூரில் அஜித்துக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அஜித் இந்த ரைடின்போது நேபாளம், பூடானில் பல உள் பகுதிகளுக்கு சென்றிருக்கிறார். பெரும்பாலும் மலை பகுதிகளில் பயணம் என்பதால் ஆங்காங்கே மழையும் பெய்திருக்கிறது. எனவே அவரது பைக்கும், ரைடர் ஷூட்டும் ரொம்பவே சேறும், சகதியுமாக மாறியிருக்கிறது.

பின் வாசல் வழியா வாங்க: இதன் காரணமாக தினமும் பைக்கை கழுவும் அஜித் ரொம்பவே சின்ன லாட்ஜ்களில்தான் தங்கினாராம். எனவே அங்கு அத்தனையையும் தானே செய்துகொள்ளும் நிலைதான் இருந்திருக்கிறது. ஒருமுறை ரைடை முடித்துவிட்டு சேறும் சகதியுமாக ரெஸிடன்ஸிக்குள் நுழைய முயன்ற அஜித்தை தடுத்து, சார் இங்க கெஸ்ட்லாம் இருக்காங்க எனவே நீங்க பின்னாடி வாசல் வழியாக வாருங்கள்” என்றனராம். ஊழியர்கள். அவர்கள் பேச்சின்படி அஜித்தும் பின் வாசல் வழியாக ரெஸிடன்ஸிக்குள் சென்றாராம். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அஜித்துக்கே இந்த நிலைமையா என ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.