தமிழ்நாடு அரசு: அரசு வேலை வேணுமா.. உடனே அப்ளே பண்ணுங்க.. சூப்பர் வாய்ப்பு.!

பள்ளி காலத்திலேயே மாணவர்களின் திறன் அறிந்து, அதற்கேற்றவாறு அவர்களுக்கு பயிற்சி அளித்து, மாணவன் தேர்ந்தெடுத்த துறையில் சிறந்து விளங்குவதற்காக நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் நான் முதல்வன் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

விருதுநகர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டம் செயலாக்கம் ; மாணவர்கள் மகிழ்ச்சி

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘‘அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினா தொடங்கப்பட்ட மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் “போட்டித் தேர்வு” பிரிவானது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை, வறுமை ஒழிப்புத் திட்டம் மற்றும் ஊரக கடன்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

“நான் முதல்வன்” போட்டித் தேர்வு பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசுப் போட்டிகளை எளிதாக அணுகுவதற்கு ஏதுவான சிறந்த திறன் பயிற்சி வழங்குவதையே முதன்மையான குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையங்களான (SSC), இரயில்வே பணியாளர் தேர்வுகள் (RRB) வங்கித் தேர்வுகள் (Banking) இந்திய குடிமைப் பணித் தேர்வுகள் (UPSC) போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு சிறந்த முறையில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் முதற்கட்டமாக இரயில்வே, SSC, வங்கித் தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி, மாவட்டந்தோறும் அளிக்கப்படவுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்டத்திற்கு தலா 150 மாணவர்கள் வீதம் நேரடி வகுப்பறைப் பயிற்சி சிறந்த வல்லுநர்களைக் கொண்டு வழங்கப்படும்.

மாணவர்களுக்கான பயிற்சி மற்றும் அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கான செலவீனங்களை “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் அரசே ஏற்றுக்கொள்ளும். இப்பயிற்சியின் அங்கமாக 300 மணிநேர தனி வழிகாட்டல், 100-க்கும் மேற்பட்ட மாதிரித் தேர்வுகள் ஆகியவை 100 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இத்திட்டத்திற்கான வல்லுநர்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் நியமிக்கப்படுவார்கள்.

மாவட்டந்தோறும் நடைபெறவிருக்கும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 20.05.2023. மேலும் பயிற்சி வகுப்புகள் 25.05.2023 அன்று தொடங்கவிருக்கிறது. மேலும் விவரங்களுக்கு https://www.naanmudhalvan.tn.gov.in/ என்ற இணைய தளத்தை அணுகவும். இப்பயிற்சியில் பயன்பெற ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்கள் “http://candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC_REGISTRATION.ASPX’’ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்’’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.