களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் 107- 109 இடங்களில் வெல்லும் என்று சவுத் பர்ஸ்ட் எக்சிட் போல் கருத்து கணிப்பு வெளியிட்டு உள்ளது. அதாவது கர்நாடகாவில் தொங்கு சட்டசபை உருவாகும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு கர்நாடகாவில் தொங்கு சட்டசபை உருவான நிலையில் எடியூரப்பா 6 நாட்கள் ஆட்சி அமைத்தார். அதன்பின் ஜேடிஎஸ் – காங்கிரஸ் சார்பாக குமாரசாமி ஆட்சி அமைத்தார்.
ஒன்றரை வருட ஆட்சி ஆபரேஷன் கமலா காரணமாக கவிழ்ந்த காரணத்தால், மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தது. எடியூரப்பா மீண்டும் ஆட்சி அமைத்த நிலையில், அதன்பின் பொம்மை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
அதாவது 5 வருடத்தில் 3 முதல்வர்கள் அங்கே ஆட்சி வகித்தனர். 4 முறை பதவி ஏற்பு விழாக்கள் மட்டும் நடந்தன. கடந்த வருடம் போல இந்த வருடம் தொங்கு சட்டசபை உருவாகுமா அல்லது தனி ஒரு கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல்: கர்நாடகா சட்டசபை தேர்தல் நிறைவு பெற்றுள்ளது. இதுவரை 66 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன. இப்போது வரிசையில் நிற்பவர்கள் சேர்த்து மேலும் சில நிமிடங்களுக்கு வாக்குப்பதிவு நடக்கும். 7 மணி அளவில் முழுமையான வாக்குப்பதிவு நிலவரம் தெரிய வரும்.
சுமார் 70 சதவிகிதம் வாக்குகள் இந்த தேர்தலில் பதிவாகலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. 224 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடந்துள்ளது. கர்நாடகா சட்டசபை பதவி காலம் மே 24-ந் தேதியுடன் முடிவடைகிறது.
தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். மொத்தம் அம்மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.
கர்நாடகாவில் மொத்தம் உள்ள 5.21 கோடி வாக்காளர்களில் 2.62 கோடி ஆண் வாக்காளர்களும், 2.59 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
கருத்து கணிப்பு: கர்நாடகாவில் காங்கிரஸ் 107- 109 இடங்களில் வெல்லும் என்று சவுத் பர்ஸ்ட் எக்சிட் போல் கருத்து கணிப்பு வெளியிட்டு உள்ளது. அதாவது கர்நாடகாவில் தொங்கு சட்டசபை உருவாகும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அங்கே மெஜாரிட்டியை பெற 113 இடங்களில் வெல்ல வேண்டும். அதனால் காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்க முடியாது,
பாஜக 78-90 இடங்களில் வெல்லும் என்று சவுத் பர்ஸ்ட் எக்சிட் போல் தெரிவித்து உள்ளது.
அதேபோல் ஜேடிஎஸ் 23- 29 இடங்களை வெல்லும் என்று சவுத் பர்ஸ்ட் எக்சிட் போல் கருத்து கணிப்பு தெரிவித்து உள்ளது.
இதனால் அங்கே ஆட்சி அமைக்க ஜேடிஎஸ் கட்சியின் ஆதரவு தேவை என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.