சென்னையில் மின்வாரிய ஊழியர்களுடன் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் உடன் அமைச்சர் செந்தில் பாலாஜி நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவிக்கையில், “1 .12 .2019 தேதி முதல் பெறுகின்ற ஊதியத்தில் ஆறு சதவீதம் ஊதிய உயர்வு வழங்க நிர்வாகத்தின் சார்பிலும், தொழிற்சங்க பிரதிநிதிகள் சார்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.
அதேபோல இரண்டாவதாக அதே தேதியில் 10 ஆண்டுகள் பணி செய்து முடித்த ஊழியர்களுக்கும், மற்ற அலுவலர்களுக்கும் பணி பலனாக மூன்று சதவீதம் ஊதிய உயர்வாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
மூன்றாவதாக ஊதிய உயர்வின் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஆண்டு கொண்டு இருக்கு 527 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.
ஊதிய உயர்வின் மூலம் ஏற்படும் நிலுவைத் தொகை 2019 முதல் கொடுக்க வேண்டியதாக உள்ளது. 31.1.2022 வரை மாதம் ஒன்றுக்கு 500 ரூபாய் விதம் இரண்டு தவணைகள் ஆகவும், 1.4.2022 முதல் இப்போது முதல் கணக்கு எடுத்து வழங்க வேண்டிய நிலுவை தொகையை இரண்டு தவணைகளாக வழங்கவும் முடிவு செய்து, நிர்வாகமும் தொழிற்சங்க பிரதிநிதிகளும் ஏற்றுக்கொள்கின்றார்கள். இதற்க்கு கூடுதலாக 623 கோடி வாரியத்திற்கு செலவுகள் ஏற்படும்” என்று அமைச்சர் தெரிவித்தார்.