140ஐ தொட்ட காங்கிரஸ்… 10 வருஷம் பின்னாடி போன பாஜக… புரட்டி போட்ட இந்தியா டுடே கருத்துக்கணிப்பு!

ஒட்டுமொத்த நாடும் பெரிதும் எதிர்பார்த்த கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. வரும் மே 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சிக் கட்டிலில் அமரும்.

இந்நிலையில் எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி பரபரப்பை கொளுத்தி போட்டுள்ளது. குறிப்பாக இந்தியா டுடே – ஆக்ஸிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

கடலோர கர்நாடகா (19/224)

கட்சிகள்தொகுதிகள்வாக்கு சதவீதம்காங்கிரஸ்340பாஜக1650மதச்சார்பற்ற ஜனதா தளம்06மற்றவை04

மத்திய கர்நாடகா (23/224)
கட்சிகள்தொகுதிகள்வாக்கு சதவீதம்காங்கிரஸ்1241பாஜக1035மதச்சார்பற்ற ஜனதா தளம்117மற்றவை07

பெங்களூரு (28/224)

கட்சிகள்தொகுதிகள்வாக்கு சதவீதம்காங்கிரஸ்1744பாஜக1038மதச்சார்பற்ற ஜனதா தளம்115மற்றவை03

ஹைதராபாத் கர்நாடகா (40/224)

கட்சிகள்தொகுதிகள்வாக்கு சதவீதம்காங்கிரஸ்3247பாஜக736மதச்சார்பற்ற ஜனதா தளம்113மற்றவை04

மும்பை கர்நாடகா (50/224)

கட்சிகள்தொகுதிகள்வாக்கு சதவீதம்காங்கிரஸ்2845பாஜக2142மதச்சார்பற்ற ஜனதா தளம்18மற்றவை05

ஓல்டு மைசூரு (64/224)
கட்சிகள்தொகுதிகள்வாக்கு சதவீதம்காங்கிரஸ்3640பாஜக1825மதச்சார்பற்ற ஜனதா தளம்628மற்றவை37

ஒட்டுமொத்த கணிப்பு (224/224)
கட்சிகள்தொகுதிகள்வாக்கு சதவீதம்காங்கிரஸ்122-14043பாஜக62-8035மதச்சார்பற்ற ஜனதா தளம்20-2516மற்றவை0-36
கடந்த 2008 சட்டமன்ற தேர்தலில் 110 இடங்களை பிடித்த பாஜக, அடுத்து நடந்த 2013 தேர்தலில் 40ஆக சறுக்கியது. அதன்பிறகு இம்முறை மீண்டும் இரண்டு இலக்கமாக சரியும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பு தொடர்பாகமுன்னாள் முதல்வர் எடியூரப்பாவிடம் கேட்கையில், என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

எடியூரப்பா உறுதி

பாஜக தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கும். தேர்தல் முடிவுகள் வெளிவரும் போது தெரியவரும். முதல்வர் பதவியை என்னிடம் இருந்து யாரும் பறிக்கவில்லை. நானாக தான் விலகினேன். எனக்கு எந்த வருத்தமும் இல்லை. லிங்காயத்து சமூகத்தினர் எங்கள் பக்கம் தான் நிற்கின்றனர். அவர்களின் ஆதரவுடன் பாஜக ஆட்சிக் கட்டிலில் அமரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.