இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
விஜய்யின் வித்யாசமான நடிப்பில் லோகேஷ் கனகராஜின் அதிரடியான இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வருகின்றது. லியோ என்னதான் தமிழ் படமாக இருந்தாலும் இப்படத்தை ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது.
சென்சேஷனல் இயக்குனரான லோகேஷ் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளார் என்பதனால் இவ்வளவு எதிர்பார்ப்பு இப்படத்திற்கு இருந்து வருகின்றது. குறிப்பாக விக்ரம் படத்தை போல லியோ படமும் முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலிலேயே உருவாகி வருகின்றது என்பதன் காரணமாகவே இபபடத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.
Ajith: விடாமுயற்சி படத்தில் ஹைலைட்டான விஷயமே அதுதானாம்..ரசிகர்களுக்கு செம ட்ரீட் கன்பார்ம்..!
தற்போது இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படப்பிடிப்பில் விஜய் உட்பட த்ரிஷா, சஞ்சய் தத் ஆகியோரும் கலந்து வருகின்றனர். மேலும் மன்சூர் அலி கான் மற்றும் அர்ஜுன் ஆகியோரும் இப்படப்பிடிப்பில் தற்போது கலந்துகொண்டு வருகின்றனர்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
விஜய் மற்றும் த்ரிஷா சம்மந்தப்பட்ட காட்சிகளும், அர்ஜுன் மற்றும் விஜய்க்கு இடையேயான சண்டை காட்சிகளும் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றதாம். இந்நிலையில் மே மாதம் இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடக்க இருக்கின்றது.
இதைத்தொடர்ந்து அக்டோபர் மாதம் லியோ திரைப்படம் மிகப்பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருப்பதால் லியோ படத்துடன் வேறெந்த படமும் வெளியாகாமல் சோலோவாகவே லியோ வெளியாகும் என்பதால் வசூலில் மிகப்பெரிய சாதனையை இப்படம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் லியோ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த பிரபல நகைச்சுவை நடிகர் மனோபாலா சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானார். இந்த செய்தி ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது. மேலும் மனோபாலாவிற்கு நேரில் சென்று தளபதி விஜய் அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் லியோ படத்தில் மனோபாலா நடித்த அனைத்து காட்சிகளையும் வைக்குமாறு லோகேஷிடம் கண்டிஷனாக சொல்லிவிட்டாராம் தளபதி. லோகேஷ் நேரம் கருதி சில காட்சிகளை வெட்டி நீக்கிவிடலாம் என முடிவெடுக்க அதற்கு விஜய் மனோபாலாவின் காட்சிகளை மட்டும் நீக்கிவிடாதீர்கள். அவர் நடித்த அனைத்து காட்சிகளும் படத்தில் இடம்பெற வேண்டும் என ஸ்ட்ரிக்ட்டாக கூறிவிட்டாராம்.
லோகேஷும் இதற்கு சம்மதம் தெரிவிக்க மனோபாலாவின் காட்சிகள் அனைத்தும் லியோ படத்தில் இடம்பெற இருக்கின்றதாம். இந்நிலையில் விஜய்யின் இந்த முடிவை கேட்டு படக்குழுவினர் அனைவரும் நெகிழ்ச்சியில் இருக்கின்றார்கள்.
மனோபாலா மற்றும் விஜய் இதுவரை பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். மேலும் மனோபாலாவிடம் விஜய் பல ஆண்டுகாலமாக நெருங்கி பழகியும் இருக்கின்றார். எனவே அவருக்கு மரியாதையை செய்யும் விதமாக விஜய் இந்த முடிவை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.