இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
ரஜினி தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக இருந்து வருகின்றார். கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு நடிகராக வலம் வரும் ரஜினி தற்போதும் பிசியாக பல படங்களில் நடித்து வருகின்றார். நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர், ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் லால் சலாம் ஆகிய படங்களில் தற்போது நடித்து வரும் ரஜினி அடுத்ததாக ஞானவேலின் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார்.
இதையடுத்து லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தன் 171 ஆவது திரைப்படத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்நிலையில் ரஜினி மற்றும் நெல்சனின் கூட்டணியில் உருவாகும் ஜெயிலர் திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
Ajith: விடாமுயற்சி படத்தில் ஹைலைட்டான விஷயமே அதுதானாம்..ரசிகர்களுக்கு செம ட்ரீட் கன்பார்ம்..!
தற்போது போஸ்டர் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்க ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது. இதையடுத்து ரஜினி தற்போது லால் சலாம் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக மும்பைக்கு சென்றுள்ளார். இப்படத்தில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இந்நிலையில் சமீபத்தில் இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா ரஜினியை பற்றி பேசிய விஷயம் தான் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது. 16 வயதினிலே என்ற படத்தை இயக்கிய பாரதிராஜா அப்படத்தில் ரஜினியை வில்லனாக நடிக்க வைத்தார். பரட்டை என்ற கதாபாத்திரத்தில் மிரட்டலான வில்லனாக நடித்து ரஜினி அசத்தியிருப்பார்.
அதைத்தொடர்ந்து பாரதிராஜாவும் ரஜினியும் நெருங்கிய நண்பர்களாக மாறினர். மேலும் 16 வயதினிலே படத்தில் வில்லனாக நடித்த ரஜினி ஹீரோவாக மாறி மளமளவென ஹிட் படங்களாக கொடுத்து சூப்பர்ஸ்டார் அந்தஸ்தை அடைந்தார். இதைத்தொடர்ந்து ரஜினியின் சம்பளமும் கணிசமாக உயர்ந்தது.
இந்நிலையில் பாரதிராஜா ஒரு சில இயக்குனர்களை ரஜினியிடம் அனுப்பி அவரிடம் கதை சொல்லி படம் பண்ணுமாறு கூறியுள்ளார். இதைக்கேள்வி பட்ட ரஜினி பாரதிராஜாவிடம் ,நீங்கள் என்னை வைத்து படமெடுக்க மாட்டிங்களா என கேட்டுள்ளார். அதற்கு தற்போது உங்களின் சம்பளம் 30 லட்சம், அந்த சம்பளத்தை என்னால் கொடுக்க முடியாது என பாரதிராஜா கூறியுள்ளார்.
இதையடுத்து ரஜினி, பாரதிராஜாவின் சட்டைப்பையில் இருந்து ஐந்து ரூபாயை எடுத்துக்கொண்டு, எனக்கு இது போதும், மீதி பணத்தை படத்தை எடுத்த பிறகு கொடுங்கள் என கூறவே இவர்கள் கூட்டணியில் கொடி பறக்குது என்ற திரைப்படம் உருவானது.
இதனை பாரதிராஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் படத்தை முடித்த பிறகு பாரதிராஜா 30 லட்சத்தை எடுத்துக்கொண்டு ரஜினியிடம் கொடுக்க, ரஜினி 20 லட்சத்தை மட்டும் வாங்கிக்கொண்டு மீதி பணத்தை பாரதிராஜாவிடம் கொடுத்துவிட்டாராம் என்பது குறிப்பிடத்தக்கது.