கோத்தகிரி
கோத்தகிரி காந்தி மைதானத்தில் பொரங்காடு சீமை படுகர் நல சங்கம் சார்பில் படுகர் தினத்தையொட்டி மாவட்ட அளவிளான கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து 32 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டியின் முதல் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் நேற்று 2 ஆம் சுற்று போட்டிகள் நடைபெற்றன.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் கடைகம்பட்டி அணியும் இளித்தொரை அணியும் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் கோல் எதுவும் போடாததால் சமநிலையில் முடிந்தது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க டை பிரேக்கர் முறை பின்பற்றப்பட்டது. டை பிரேக்கரில் இளித்தொரை அணி 4 -2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் அணிக்கொரை மற்றும் அரக்கம்பை அணிகள் விளையாடின. இதில் அணிக்கொரை அணி 2 -0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் உல்லாடா மற்றும் சுண்டட்டி அணிகள் விளையாடின. இதில் ஆட்டம் துவங்கியது முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய சுண்டட்டி அணி 5 கோல்கள் போட்டு வெற்றி பெற்றது. உல்லாடா அணியால் ஒரு கோல் மட்டுமே திருப்பி அடிக்க முடிந்தது. இதன் மூலம் 5 -1 என்ற கோல்கள் கணக்கில் சுண்டட்டி அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற இந்த 3 அணிகளும் கால் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றன.