வெறும் 27 நொடிகள்… லண்டனில் புலம்பெயர் இளைஞருக்கு ஏற்பட்ட கொடூரம்: இலங்கையருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு


மேற்கு லண்டனில் தவறான தகவலால் ஆப்கான் அகதி ஒருவர், இளைஞர்கள் இருவரால் 15 முறை கொடூரமாக தாக்கப்பட்டு, பரிதாபமாக மரணமடைந்த வழக்கில் இலங்கையர் உட்பட இருவருக்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நடுக்கும் கொலைச்சம்பவம்

மேற்கு லண்டனில் சவுத்ஹாலில் உள்ள சாலையிலேயே நடுக்கும் இந்த கொலைச்சம்பவம் நடந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அகதியான 16 வயது ரிஷ்மீத் சிங் என்பவரின் சடலமானது 2021 நவம்பர் 24ம் திகதி மீட்கப்பட்டது.

வெறும் 27 நொடிகள்... லண்டனில் புலம்பெயர் இளைஞருக்கு ஏற்பட்ட கொடூரம்: இலங்கையருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு | Afghan Refugee Stabbed Srilankan Teen Jailed Image: Met Police

2019 அக்டோபர் மாதம் தலிபான்களிடம் இருந்து தப்பி லண்டனில் தஞ்சமடைந்த இளைஞர் இவர். முதற்கட்ட விசாரணையில் தவறாக அடையாளம் காணப்பட்டு, ரிஷ்மீத் சிங் கொல்லப்பட்டுள்ளது வெளியானது.

இந்த வழக்கில் தற்போது இலங்கையரான 18 வயது வனுஷன் பாலகிருஷ்ணன் மற்றும் இல்யாஸ் சுலைமான் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதில் வனுஷன் பாலகிருஷ்ணனுக்கு குறைந்தபட்சம் 24 ஆண்டுகளும் சுலைமானுக்கு 21 ஆண்டுகளும் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது ரிஷ்மீத் சவுத்ஹால் பூங்காவில் நண்பர்களுடன் இருந்ததாகவும், தனது அம்மா வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத இருவர் அவரை நோக்கி வேகமாக வருவதைக் கண்டதாகவும் நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் 27 நொடிகள்... லண்டனில் புலம்பெயர் இளைஞருக்கு ஏற்பட்ட கொடூரம்: இலங்கையருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு | Afghan Refugee Stabbed Srilankan Teen Jailed Image: Met Police

27 நொடிகளில் கொலைவெறி தாக்குதல்

இந்த நிலையில் நடக்கப் போவதை புரிந்துகொண்ட ரிஷ்மித்தின் நண்பர்கள், ஓடிவிடு என கத்தியுள்ளனர்.
ஆனால், உயிருக்கு பயந்து ஓடிய ரிஷ்மித் சிங் தடுமாறி சாலையில் விழவே, கத்தியால் பலமுறை சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து சென்றுள்ளார் ரிஷ்மித்தின் தாயார். ஆனால் அப்போது அந்த இளைஞர் மரணமடைந்திருந்தார்.
தலிபான்களின் அச்சுறுத்தல் காரணமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் கட்டாயம் ஏற்பட்டதாகவும், பின்னர் ரிஷ்மீத்தும் அவரது தாயாரும் பிரித்தானியாவில் தஞ்சம் கோரியதாகவும் நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது.

வெறும் 27 நொடிகள்... லண்டனில் புலம்பெயர் இளைஞருக்கு ஏற்பட்ட கொடூரம்: இலங்கையருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு | Afghan Refugee Stabbed Srilankan Teen Jailed Image: Met Police

மட்டுமின்றி, வெறும் 27 நொடிகளில் அந்த இளைஞர்கள் இருவரும் ரிஷ்மித் சிங் மீது கொலைவெறி தாக்குதலை முன்னெடுத்து, மாயமானதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் ரிஷ்மித் சிங் எந்த சட்டவிரோத குழுவிலும் தொடர்புடையவர் அல்ல எனவும், தவறான நேரத்தில் தவறான இடத்தில் சிக்கிக்கொண்டதால், பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸ் தரப்பு நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.