ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை மே மாத தொடக்கம் முதலே அதிகரித்து காணப்படுகிறது. தினமும் சராசரியாக 65 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். இவர்கள் மூலம் 3.5 கோடி ரூபாய்க்கு மேல் உண்டியல் வசூல் கிடைத்து வருகிறது. கடந்த வாரம் டோக்கன் இல்லாமல் வரும் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய 12 மணி நேரத்திற்கு மேல் ஆனது.
ஏழுமலையான் தரிசனம்இந்நிலையில் இந்த வாரம் 7 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை மட்டுமே ஆவதாக தேவஸ்தானம் தகவல் வெளியிட்டுள்ளது. அதுவே SSD எனப்படும் ஸ்லாட் சர்வ தர்சனத்தின் மூலம் வருபவர்களுக்கு 3 மணி நேரம் மட்டுமே ஆகிறதாம். சிறப்பு நுழைவு டிக்கெட் வைத்திருந்தால் வெறும் ஒரு மணி நேரம் தான் ஆவதாக தெரிகிறது. இதனால் ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
’மோக்கா’ புயல்தரிசனம் நேரம் குறைந்ததற்கு புயலும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அதாவது, தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக உருவெடுத்துள்ளது. அதற்கு ’மோக்கா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த புயல் காரணமாக திருமலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
திருப்பதி தரிசனமா… போலி டிக்கெட்டை எப்படி கண்டறிவது? OTPல தான் விஷயமே இருக்கு!
பக்தர்கள் பயணம்மழை குறித்து தகவலறிந்த பக்தர்கள் பலரும் தங்களது பயணத்தை தள்ளி போட்டுள்ளனர். தற்போதைக்கு திருமலை செல்லும் திட்டத்தை ரத்து செய்துள்ளனர். இதனால் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதாக தெரிகிறது. அதுவும் வரிசையில் நின்றால் கிடுகிடுவென சென்று கொண்டே இருக்கிறதாம்.
மீண்டும் இயல்பு நிலைகுடோனில் அடைக்கும் வேலையே இல்லை. சிறிது ஓய்விற்காக மட்டும் குடோன்களில் பக்தர்கள் ஓய்வெடுக்கும் சூழல் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் மோக்கா புயலின் தாக்கம் ஆந்திராவில் பெரிதாக இருக்காது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மழை அடுத்த சில நாட்களில் முற்றிலும் குறைந்து விடும்.
திருமலையில் பக்தர்கள் கூட்டம்அதன்பிறகு கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும். இது பக்தர்களுக்கு ஏற்ற சூழலாக மாறுவதால் ஏழுமலையானை தரிசிக்க கிளம்பி விடுவர். அதன்பிறகு திருமலையில் கூட்டம் நிரம்பி வழியும். பழைய படி 12 மணி நேரத்திற்கு மேல் தரிசனம் செய்ய நேரமெடுக்கும் என பக்தர்கள் கூறுகின்றனர்.
திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவல்? பகீர் இமெயில்.. முழு மலையையும் சுற்றி வளைத்த போலீஸார்.. என்னாச்சு?
கபிலேஸ்வரா சுவாமி பூஜைதேவஸ்தானம் நேற்று பக்தர்களுக்கு வெளியிட்டுள்ள சிறப்பு அறிவிப்பில், திருப்பதியில் உள்ள ஸ்ரீ கபிலேஸ்வரா சுவாமி கோயிலில் மே 11 முதல் 14ஆம் தேதி மகா சம்புரோக்ஷனம் பூஜைகள் நடைபெறவுள்ளது. இதை பக்தர்கள் நேரில் வந்து கண்டு ரசிக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.