Google IO 2023 நிகழ்ச்சியில் வெளியான முக்கிய அறிவிப்புகள்! போல்டு, AI, ஸ்மார்ட் கருவிகள் என அனைத்திலும் விளையாடும் கூகுள்!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
ஒவ்வொரு ஆண்டும் Google நிறுவனம் அந்த ஆண்டிற்கான புதிய அறிவிப்புகளை அதன்
Google I/O நிகழ்ச்சியில்
அறிவிக்கும். அப்படி இந்த 2023 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பில் புதிதாக Google Tablet, Google Pixel Fold, Google Pixel 7a, Google AI போன்ற பல கருவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Google Pixel FoldFold வகை ஸ்மார்ட்போன்கள் உலகளவில் மிகவும் பிரபலமாக மாறிவரும் இந்த காலகட்டத்தில் Google நிறுவனமும் அதன் முதல் Fold ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Samsung Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போனை விட மிகவும் மெலிதாக உள்ளது.
இதன் டிஸ்பிளே ஒரு 7.6 இன்ச் OLED ஸ்க்ரீன் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை 1,799 ஆயிரம் டாலர் (இந்திய ரூபாயில் 1.45 லட்சம் ரூபாய்) விலையில் இருக்கும். இது ஜூன் மாதம் முதல் கிடைக்கும் என்றும் ஆனால் இதை இந்தியாவில் இன்னும் அறிமுகம் செய்யவில்லை. இந்த ஸ்மார்ட்போனுடன் Pixel Watch ஒன்றை Google நிறுவனம் இலவசமாக வழங்குகிறது.
Google Pixel 7Aமிகவும் விலை குறைந்த Google ஸ்மார்ட்போனாக இந்த Pixel 7a ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. இந்த கருவி இந்தியாவில் தற்போது 43,999 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இதில் முதல் முறையாக 90HZ Refresh rate, 64MP முக்கிய கேமரா வசதி போன்றவை உள்ளன. இதை இந்தியாவில் Flipkart மூலமாக விற்பனை செய்யப்படும்.
Google Pixel Tabletகடைசியாக ஒருவழியாக Google Tablet வெளியாகிவிட்டது. Android Tablet வகைகளிலேயே மிகவும் சிறந்த அனுபவத்தை இந்த டேப்லெட் தரும் என்று Google நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இது 11 நாடுகளில் மட்டுமே கிடைக்கும்.
இந்த tablet விலை 499 டாலர் என்றும் வரும் ஜூன் 20 முதல் இந்த ஆண்ட்ராய்டு டேப்லெட் விற்பனை செய்யப்படும். Google நிறுவனத்தின் Tensor G2 சிப் கொண்டு இயங்கும் இந்த டேப்லெட் முதல் முறையாக ஒரு தனித்துவமான Magnetic Dock உடன் வருகிறது.
நாம் பயன்படுத்தாத நேரத்தில் இந்த Magnetic Dock மீது வைத்துவிட்டால் அந்த நேரத்தில் வயர்லெஸ் சார்ஜிங் நடக்கும். Android Tablet பலவற்றில் சார்ஜிங் என்பது ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது. மிகப்பெரிய பேட்டரி இருப்பதால் சார்ஜிங் செய்ய அதிக நேரம் எடுக்கிறது. இது போன்ற Magnetic Tablet அந்த பிரச்னையை தீர்க்கும்.
​Google AI Chatbotசெயற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் Microsoft நிறுவனம் அதன் Open AI Chat GPT செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தை பயன்படுத்தி இந்த போட்டியில் முன்னிலையில் இருக்கிறது.
அதேபோன்ற ஒரு Chat AI அனுபவத்தை Google நிறுவனமும் அறிவித்துள்ளது. முதல் கட்டமாக அமெரிக்காவில் இருக்கும் பயனர்களுக்கு ஒரு சோதனை கட்டமாக பயன்படுத்த அனுமதித்துள்ளது.

நாம் ஏதாவது ஒரு கேள்வியை AI Chatbot இடத்தில் எழுப்பினால் அதற்கான விடையை Chat வடிவத்தில் அது வழங்கும். இதற்கு அது Google Search பயன்படுத்தி நமக்கான சிறந்த விடையை தருகிறது. அதன் Bard Chatbot வசதியை நேரடியாக Android messages, Settings போன்றவற்றில் வழங்கவும் Google திட்டமிட்டுள்ளது.
Google Magic editorஏற்கனவே பயனர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் Magic Eraser வசதியின் புதிய மேம்படுத்தப்பட்ட அப்டேட் இந்த ஆண்டு வெளியாகவுள்ள நிலையில் Magic Editor என்ற ஒன்றை Google அறிவித்துள்ளது.
இது Photoshop போன்ற ஒரு மொபைல் ஆப். ஒரு புகைப்படத்தை எடுத்து அதனை நமக்கு ஏற்றவாறு எப்படி வேண்டுமானாலும் எடிட்டிங் செய்துகொள்ளலாம்.
Google AI WallpapersAI தொழிநுட்பத்தை இப்போது Google Android OSகளிலும் பயன்படுத்த கூகுள் முடிவெடுத்துள்ளது. இதற்காகவே AI Wallpapers, AI Photos Creation, AI Emoji, Moving Backgrounds என பயனர்களுக்கு தனிப்பட்ட AI அனுபவத்தை வழங்க கூகுள் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
Google Smart HomeGoogle Nest, Tablet போன்ற பலவற்றை வீடுகளில் பயன்படுத்த உதவும் Google Home App இப்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. நமது Google Home App இனி நமது Wear OS மூலமாகவும் கட்டுப்படுத்தும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது.
Google Workspaceநாம் தினமும் நமது அலுவலக வேலைகளுக்கு பயன்படுத்தும் Google Workspace கருவிகளான Gmail, Docs, Sheets, Slides போன்ற அனைத்திலும் இப்போது AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
இந்த AI பயன்படுத்தி நம்மால் e Mail, Content Creation, Sheets, Presentations, Visual Photo Slides போன்றவரை சுலபமாக உருவாக்கமுடியும். இதன் நேரடி மென்பொருள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.
Android AutoApple நிறுவனத்தின் புதிய CarPlay 2விற்கு நேரடி பதிலாக இந்த Android Auto அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாம் இனி டிராபிக் நெரிசலில் இருக்கும்போது நேரத்தை கழிக்க இதில் வீடியோ, கேமிங், பிரௌசிங் என பலவற்றை செய்யலாம். இதன் Map தொழில்நுட்பமும் தற்போது 3D மூலமாக இயங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
​செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.