Hyundai EV plant TamilNadu – ₹ 20,000 கோடி முதலீடு தமிழ்நாடு அரசு மற்றும் ஹூண்டாய் இடையே ஒப்பந்தம்

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் (HMIL) தமிழ்நாட்டில் தனது ஆலையை விரிவுப்படுதுவதற்கும் எலக்ட்ரிக் வாகனங்கள், பேட்டரி பேக் அசெம்பிளி யூனிட் மற்றும் மாநிலம் முழுவதும் 100 EV சார்ஜிங் நிலையங்களை நிறுவுவதற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஏற்கனவே ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தமிழ்நாட்டில் தன்னுடைய ஆலையை விரிவுப்படுத்தி பல்வேறு மாடல்களை தயாரித்து வருகின்றது. குறிப்பாக நாட்டின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளராக விளங்கி வருகின்றது.

Hyundai India

தமிழ்நாடு முதல்வர் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ள புதிய

தமிழ்நாட்டில் உள்ள ஆலையில் உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய மின்சார வாகன மாடல்களை அறிமுகப்படுத்தவும் 10 ஆண்டுகளில் ரூ.20,000 கோடி ($2.45 பில்லியன்) முதலீடு செய்ய உள்ளது.

தென்கொரியாவினை தொடர்ந்து இரண்டாவது ஹூண்டாயின் மிகப்பெரிய ஆலை அதன் இந்திய துணை நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா மூலம், ஆண்டுக்கு 178,000 யூனிட் திறன் கொண்ட பேட்டரி பேக் யூனிட் ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலம் முழுவதும் 100 EV சார்ஜிங் நிலையங்களை நிறுவும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்திய நாட்டில் மொத்த உற்பத்தி அளவை ஆண்டுக்கு 8,50,000 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

மின்வாகன மின்னேற்று நிலையங்கள், நவீன வகை கார்கள் உருவாக்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிர்வாக காரணங்களுக்காக அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் ஹூண்டாய் நிறுவனத்தின் மொத்த முதலீடு ரூ.23,000 கோடியாக உயர்ந்துள்ளது. வாகனங்கள் தயாரிப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டுக்கான மின் வாகன கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

கார் ஏற்றுமதியில் ஹூண்டாய் நிறுவனம் இரண்டாவது இடத்தில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஹூண்டாய் நிறுவனம் 15,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பையும், 2 லட்சம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பை உருவாக்கி தர உள்ளது என்றார். தொடர்ந்து பேசிய முதல்வர், தொழில்துறை ஏற்கெனவே முன்னேறியுள்ளது; இனிமேலும் உயரப் போகிறது.

தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, அந்த துறை அதிகாரிகள் ஏராளமான முதலீடுகளை ஈர்த்துள்ளதாக பாராட்டு தெரிவித்தார். புதிய தொழில்துறை அமைச்சர் ராஜா தமிழகத்துக்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பார் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.