தமிழகத்தில் நடைபெற்ற பிளஸ்-2 பொதுத் தேர்வில், 600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு, கவிஞர் வைரமுத்து தங்க பேனா பரிசளித்து வாழ்த்தியுள்ளார்.
600க்கு 600 மதிப்பெண்
தமிழகத்தில் நடைபெற்ற பிளஸ்-2 பொது தேர்வு முடிவுகள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியானது.
இத்தேர்வில் திண்டுக்கலை சேர்ந்த நந்தினி என்ற மாணவி, 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.
@oneindia
இந்நிலையில் மாணவி நந்தினியை அழைத்து பாராட்டிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின், அவரது படிப்புக்கு உண்டான செலவை அரசு ஏற்றுக் கொள்ளும் என தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து கவிஞரும், தமிழ் திரை உலகின் பாடலாசிரியருமான வைரமுத்து மாணவியை பாராட்டி, ட்விட்டர் பக்கத்தில் கவிதை எழுதியிருந்திருந்தார்.
ஒரு
தச்சுத் தொழிலாளியின் மகள்
மாநிலத் தேர்வில்
உச்சம் தொட்டிருப்பது
பெண்குலத்தின் பெருமை
சொல்கிறதுஎப்படிப் பாராட்டுவது?
அண்மையில் நான்பெற்ற
தங்கப் பேனாவைத்
தங்கை நந்தினிக்குப்
பரிசளிக்கிறேன்திண்டுக்கல் வருகிறேன்;
நேரில் தருகிறேன்உன் கனவு
மெய்ப்படவேண்டும் பெண்ணே! pic.twitter.com/bkSbrmrlqt— வைரமுத்து (@Vairamuthu) May 9, 2023
இந்த பதிவை சிலர் பாராட்டியும் , சிலர் கேலி செய்தும் கருத்து தெரிவித்திருந்தனர்.
தங்க பேனா பரிசு
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து திண்டுக்கல்லில் உள்ள மாணவியின் வீட்டிற்கு, நேராக சென்று தங்கத்தால் செய்யப்பட்ட பேனா ஒன்றை பரிசளித்துள்ளார்.
வைரமுத்து தனது ட்விட்டர் பதிவில் மாணவி நந்தினியை, தனது தங்கை நந்தினி என குறிப்பிட்டு வாழ்த்தியிருந்தார். பேத்தி வயதில் இருக்கும் பெண்ணை தங்கை என சொல்லலாமா? மாணவி என குறிப்பிட்டிருந்தால் சரியாக இருக்குமென ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து தங்க பேனாவை பரிசளித்த வைரமுத்து ‘இச்சமூகத்திற்கு நீ பயனுள்ள நற்செயல்களை செய்ய நான் வாழ்த்துகிறேன்’ என கூறி மாணவிக்கு தங்க பேனாவை பரிசை வழங்கினார்.
@oneindia
மாணவியின் வீட்டிற்கு சென்று வைரமுத்து பரிசு வழங்கிய காணொளி, இணையத்தில் வைரலாகி வருவதனை அடுத்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.