மன்னருடைய முடிசூட்டுவிழாவில் நீண்ட நேரம் வாளேந்தி நின்றது எப்படி?


பிரித்தானிய மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவின்போது, அவருக்கு முன்னால் வாள் ஒன்றை ஏந்தி நடந்த பெண் ஒருவர் பெருமளவில் கவனம் ஈர்த்தார். சமூக ஊடகங்களில் அவர் குறித்த செய்திகள் அதிக அளவில் வெளியாகின.

தற்போது நீண்ட நேரம் வாளேந்தி நின்றது எப்படி என்ற இரகசியத்தை போட்டு உடைத்துள்ளார் அவர்.

தலைப்புச் செய்தியான பெண்

பிரித்தானிய மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவின்போது, அவருக்கு முன்னால் வாள் ஒன்றை ஏந்தி நடந்தவர் பெயர் பென்னி மார்டண்ட் (Penny Mordaunt). அவர் Lord President of the Council என்னும் முக்கிய பொறுப்பு வகிக்கிறார். அத்துடன், பென்னி, பிரித்தானிய நாடாளுமன்றத்தின் கீழவையின் தலைவரும் ஆவார்.

பென்னி, ஒரு மணி நேரத்துக்கும் மேல் வாளேந்தி நின்றதை அவரது சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பாராட்டியுள்ளனர்.

நீண்ட நேரம் வாளேந்தி நின்றது எப்படி?

இந்நிலையில், மன்னருடைய முடிசூட்டுவிழாவில் நீண்ட நேரம் வாளேந்தி நின்றது எப்படி என்னும் இரகசியத்தை போட்டு உடைத்துள்ளார் பென்னி.

இப்படி வாளேந்தி நிற்பதற்காக பயிற்சி எடுத்தீர்களா என பென்னியிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர், தான் இத்கும முன் ஆறு மாதங்களாக உடற்பயிற்சிக்கூடம் பக்கமே போகவில்லை என்றார். ஆனால், நம் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்துகொள்வது நல்லதுதானே என்றும் கூறினார் அவர்.

உண்மையில், பிரச்சினை ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை உறுதி செய்துகொள்வதற்காக, முடிசூட்டுவிழாவுக்கு முன் சில வலி மாத்திரைகள் எடுத்துக்கொண்டேன் என்கிறார் பென்னி.

அத்துடன், கடற்படையில் தான் எடுத்துக்கொண்ட பயிற்சியும் நீண்ட நேரம் நிற்பதற்கு தனக்கு உதவியது என்றும் கூறியுள்ளார் பென்னி.

மன்னருடைய முடிசூட்டுவிழாவில் நீண்ட நேரம் வாளேந்தி நின்றது எப்படி? | How Waited For A Long Time At The Coronation



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.