முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், அவரது மனைவி மெலானியாவும் முன்னெப்போதையும் விட நெருக்கமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரச்சாரங்களில் தீவிரம் காட்டும் மெலானியா
மீண்டும் அமெரிக்காவின் முதல் பெண்மணியாக விரும்பும் டொனால்ட் டிரம்பின் (Donald Trump) மனைவி மெலானியா டிரம்ப் (Melania Trump) பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் பல சட்டச் சிக்கல்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. டிரம்பின் பிரச்சாரத்திலிருந்து அவரது மகள் இவான்கா (Ivanka) மற்றும் அவரது கணவர் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) விலகியதிலிருந்து, அவரது மனைவி மெலானியா டிரம்ப் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்.
FoxNews
இந்நிலையில், மெலனியா அருகில் இருக்கும்போது டிரம்ப் அதிக நம்பிக்கையுடன் காணப்படுவதாகவும், அவர்களின் உறவு முன்னெப்போதையும் விட வலுவானதாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த தேர்தலை விட இந்த முறை பிரசாரத்தில் மெலனியா தன் பக்கம் அதிக உறுதுணையாக இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.
மீண்டும் முதல் பெண்மணியானால்…
கடந்த வாரம் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், மெலானியா தனது கணவர் அமெரிக்க அதிபராக இருந்தபோது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதாகவும், அவருக்கு எப்போதும் தனது ஆதரவு உள்ளது என்றும் கூறினார்.
அவர் மீண்டும் முதல் பெண்மணியானால், குழந்தைகள் கல்வி கற்கவும், செழித்து வளரவும் ஒரு பாதுகாப்பான மற்றும் வளர்ப்பு இடத்தைத் தொடர்ந்து உருவாக்கவுள்ளதாக மெலானியா கூறினார்.
Reuters
மேலும், எதிர்காலத்திற்கான நம்பிக்கையை மீட்டெடுக்கவும், அமெரிக்காவை அன்புடனும் வலிமையுடனும் வழிநடத்த முடியும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.
சட்டச் சிக்கல்கள்
இருப்பினும், தற்போது டொனால்ட் டிரம்ப் எதிர்கொள்ளும் சட்டச் சிக்கல்கள் குறித்து மெலானியா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
1990-களில் பத்திரிகை எழுத்தாளர் ஈ. ஜீன் கரோலை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அவதூறு செய்த வழக்கில் டொனால்ட் ட்ரம்ப் 5 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றம் நேற்று (புதன்கிழமை) தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
Getty Images