நொய்டா: நாட்டில் முதல் முறையாக ட்ரோன்கள் மூலம் ரத்த மாதிரிகள் நேற்று கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
எளிதில் செல்ல முடியாத இடங்களுக்கு ட்ரோன்கள் மூலம் தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் ஏற்கெனவே கொண்டு செல்லப்பட்டுள்ளன. தற்போது முதல் முறையாக ட்ரோன்கள் மூலம் ரத்த மாதிரிகள் கொண்டு செல்லப்படும் பரிசோதனை நொய்டாவில் நேற்று மேற்கொள்ளப்பட்டது.