மத்திய அரசு 6-வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி சம்பளம் பெறும் தன்னாட்சி நிறுவன ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த அகவிலைப்படியானது 1-7-2021 முதல் 189 சதவீதத்தில் இருந்து 196 சதவீதமாகவும், 1-1-2022 முதல் 196 சதவீதத்தில் இருந்து 203 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
இதே அகவிலைப்படி உயர்வை புதுவை தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் வழங்க புதுவை நிதித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை நிறுவனங்களின் சொந்த நிதியாதாரத்தில் இருந்து தான் வழங்கவேண்டும் என்றும், அதற்காக கூடுதல் நிதி எதுவும் அரசு வழங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வை ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களும் பெறலாம்.
இதற்கான உத்தரவை நிதித்துறை சார்பு செயலாளர் அர்ஜூன் ராஜமாணிக்கம் பிறப்பித்துள்ளார்.