கோத்தகிரியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி காந்தி மைதானத்தில் பொரங்காடு சீமை படுகர் நல சங்கம் சார்பில் படுகர் தினத்தையொட்டி மாவட்ட அளவிளான கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து 32 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டியின் முதல் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் 2 ஆம் சுற்று போட்டிகள் நடைபெற்றன.

முதல் போட்டியில் எடப்பள்ளி அணியும் பரலட்டி அணியும் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பரலட்டி ஒரு கோல் மற்றும் அடித்து வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் கட்டபெட்டு மற்றும் அட்டவளை அணிகள் விளையாடின. இதில் கட்டபெட்டு அணி 2 கோல்கள் போட்டு வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் ஓரசோலை மற்றும் நாரகிரி அணிகள் விளையாடின. இதில் போட்டி துவங்கியது முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய ஓரசோலை அணி 5 கோல்கள் போட்டு அபார வெற்றி பெற்றது. நாரகிரி அணியால் கோல் எதுவும் போட முடியவில்லை. நான்காவதாக நடைபெற்ற போட்டியில் நடுஹட்டி மற்றும் பேரகனி அணிகள் பங்கேற்று விளையாடின. ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்து சமநிலையில் போட்டி முடிந்தது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க டை பிரேக்கர் முறை பின்பற்றப்பட்டது. டை பிரேக்கரில் நடுஹட்டி அணி 4 -3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. கடைசியாக நடந்த போட்டியில் காத்துக்குளி மற்றும் உயிலட்டி அணிகள் விளையாடின. இதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டிருந்த நிலையில் இரண்டாவது பாதியில் வெளிச்சம் பற்றாக்குறை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. இன்று அதன் இரண்டாம் பாதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டிகளை ஏராளமான கால்பந்து ரசிகர்கள் கண்டுகளித்தனர். 2 வது சுற்றில் வெற்றி பெற்ற இந்த 4 அணிகளும் கால் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றன. இன்று காலிறுதிப் போட்டிகள் நடைபெறுகின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.