சென்னை : நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பீரித் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன் 2. இந்தப் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் ஷங்கர்.
கடந்த 2018ம் ஆண்டிலேயே இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கிய நிலையில், சில தவிர்க்க முடியாத விஷயங்களால் படத்தின் சூட்டிங் 4 ஆண்டுகள் நிறுத்தப்பட்டு, கடந்த ஆண்டில் மீண்டும் தூசித்தட்டப்பட்டது.
இதனிடையே ராம்சரணின் கேம் சேஞ்சர் படத்தையும் இயக்கிவந்த இயக்குநர் ஷங்கர், இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் தற்போது இயக்கி வருகிறார்.
இந்தியன் 2 கேரக்டர் குறித்து பாராட்டிய பாபி சிம்ஹா : நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகிவரும படம் இந்தியன் 2. இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த 1996ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. இந்தப் படத்தில் அப்பா -மகன் என இரு கேரக்டர்களில் கமல் நடித்திருந்தார். படத்தில் சுகன்யா, கஸ்தூரி, மனிஷா கொய்ராலா, கவுண்டமணி உள்ளிட்டவர்களுக்கு முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் சேனாபதி கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் கடந்த 2018ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு சூட்டிங் துவங்கப்பட்டது. ஆனால் படத்தின் சூட்டிங்கின்போது ஏற்பட்ட விபத்தால் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனிடையே ராம்சரணின் படத்தை இயக்க இயக்குநர் ஷங்கர் கமிட்டானார். லைகாவுடன் ஷங்கருக்கு இருந்த மனகசப்புகளும் பேசித் தீர்க்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டில் இநத்ப் படத்தன் சூட்டிங், மீண்டும் துவங்கப்பட்டது.
ராம்சரணின் கேம் சேஞ்சர் படம் மற்றும் கமலின் படம் இரண்டையும் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார் இயக்குநர் ஷங்கர். இந்நிலையில், இநத்ப் இந்தியன் 2 படத்தின் சூட்டிங் திருப்பதி, சென்னை உள்ளிட்ட இடங்களிலும், தைவான், ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் பொஙகலையொட்டி இந்தப் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தப் படம் குறித்து தன்னுடைய சமீபத்திய பேட்டியில் நடிகர் பாபி சிம்ஹா படத்தின் முதல் பாகம் குறித்த நினைவுகளையும் பகிர்ந்துள்ளார். தான் பள்ளியில் படிக்கும் காலகட்டத்தில் அந்தப் படம் ரிலீசானதாகவும், இந்தியன் தாத்தா போல கைவிரல்களை காட்டி தான் நண்பர்களுடன் விளையாடியது நினைவில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியன் தாத்தா என்பது சாதாரண விஷயம் கிடையாது என்றும் ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் போல, நம்ம ஊர் சூப்பர் ஹீரோ இந்தியன் தாத்தாதான் என்றும் அவர் வியப்பை பகிர்ந்துள்ளார். அப்படி ஒரு படத்தின் பார்ட் 2வில் தான் இருப்பதே பெரிய விஷயம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தப் படத்தை ரசிகர்கள் பெரிதாக பார்க்கப் போகிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். வேற லெவலில் பார்க்கப் போவதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சூது கவ்வும் படத்தை பார்த்துவிட்டு, தன்னுடைய அலுவலகத்திற்கு படக்குழுவினரை அழைத்து பாராட்டு தெரிவித்ததாகவும் நலன் உள்ளிட்ட படக்குழுவினரை தனித்தனியாக பாராட்டியதாகவும் தனக்கும் சிற்பபான பாராட்டு கிடைத்ததாகவும் பாபி சிம்ஹா தெரிவித்தார். அமுல் பேபி நன்றாக நடித்திருந்தீர்கள் என்று தனக்கு பாராட்டு தெரிவித்ததாகவும் பாபி சிம்ஹா கூறினார். கமல் இருக்கும் இடத்தில் ஒரு வைப்ரேஷன் இருப்பதை தவிர்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.