பாலக்காடு : கேரள மாநிலம், பாலக்காடு ஏமூர் பகவதி அம்மன் கோவிலில், மகாபாரத கதகளி மகோற்சவ நிகழ்ச்சி நடந்தது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் அகத்தேத்தறை அருகே உள்ளது கல்லேக்குளங்கரை. இங்கு கேரள கலாசாரத்தின் சின்னமாக போற்றப்படும் கதகளி நடனம் கற்பிக்கப்படுகிறது. அதனால், ‘கதகளி கிராமம்’ என அழைக்கப்படுகிறது.
ஆண்டு விழாவும் மகாபாரத கதகளி மகோற்சவமும், பிரபல கதகளி நடன கலைஞர் கலாமண்டலம் ராமன்குட்டி நாயர் நினைவு தினத்தையும், எம்.எல்.ஏ., பிரபாகரன் துவக்கி வைத்தார்.
ஏமூர் பகவதி அம்மன் கோவில் சப்தாஹ மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், கதகளி கிராமம் நிர்வாக அறங்காவலர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். கதகளி கிராமத்தின், 25 மாணவர்கள் பங்கேற்ற, மகாபாரத நிகழ்வாக ‘அரங்கொலி’ என்ற நிகழ்ச்சி நடந்தது.
விழாவில், நேற்று காலை, 8:00 மணி முதல், 12 மணி நேரத்துக்கு, தொடர் கதகளி மகோற்சவம் துவங்கியது.
பஞ்சபாண்டவரும் பாஞ்சாலியும் அரங்கில் ஏறி புறப்படுவதோடு நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து பாண்டு மாந்திரீயம், பகவதம், துரியோதன வதம், கிர்மீரவதம், கல்யாண சவ்கந்திகம், கிராதம், காலகேய வதம், கீசகவதம், உத்தரா சுயம்வரம் ஆகிய கதைகள், கதகளி நடனம் வாயிலாக அரங்கேறின.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement