தமிழ்நாடு
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.நாகர்கோவில் – நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் பயணித்த 4 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வரும் மே 15 முதல் 26ஆம் தேதி வரை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த 6ஆம் தேதி நடைபெறவிருந்த கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு, வரும் 14ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி – சென்னை செல்லும் புறநகர் ரயில்கள், சுமார் ஒரு மணி நேரம் தாமதம் ஆனதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். சென்னை நோக்கி செல்லும் சர்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில்கள் தாமதம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் பட்டியல் விநியோகம் செய்யப்படுகிறது.தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த மோக்கா தீவிர புயலானது மிக தீவிர புயலாக மாறியது. இது வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து, வரும் 14ம் தேதி தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கடற்கரையை கடக்கக்கூடும்.சென்னையில் கல்லூரி மாணவி தற்கொலை சம்பவத்தில் திடீர் திருப்பமாக மூன்று பேர் சிக்கியுள்ளனர்.
இந்தியா
கேரள மாநிலத்தில் மருத்துவப் பணியாளர்களை பாதுகாக்க அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. மருத்துவமனையில் நிரந்தரமாக போலீசாரை நிறுத்தவும் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மதுபான விற்பனை 35 சதவீதம் அதிகரித்துள்ளது. தினமும் 115 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம்
பாலஸ்தீன நாட்டின் காசா பகுதியில் இஸ்ரேல் தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வர்த்தகம்
சென்னையில் 356வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விளையாட்டு
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ். 13.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அசத்தியது. 47 பந்துகளில் 98 ரன்கள் விளாசி ராஜஸ்தான் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை படைத்தார்.