24 காவலர்களை பணியிடமாற்றம் செய்து காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவு!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்தில், விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரித்து வருகிறது. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட காவல் சரகத்தில் பணியாற்றும் 24 காவலர்களை பணியிடமாற்றம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார்.