சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, க்ரித்தி ஷெட்டி, அரவிந்த்சாமி, சரத்குமார், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியானது கஸ்டடி திரைப்படம்.
மாநாடு படத்திற்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் ரசிகர்கள் ரொம்ப எதிர்பார்த்தாலும், மன்மத லீலை, கஸ்டடி போன்ற சுமாரான படங்கள் தான் கிடைப்பதாக படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் புலம்பி வருகின்றனர்.
அமீர்கான் உடன் பாலிவுட்டுக்கு சென்றே அடி வாங்கிய நாக சைதன்யாவின் இந்த படம் என்ன ஆனது என்பது குறித்து நெட்டிசன்கள் அளித்துள்ள விமர்சனத்தை இங்கே காணலாம் வாங்க..
கஸ்டடி கதை: ஹிட்மேன் ராஜுவை (அரவிந்த் சாமி) கான்ஸ்டபிள் சிவா (நாக சைதன்யா) எப்படியாவது நீதிமன்றத்துக்கு சென்று ஒப்படைக்க வேண்டும் என போராடுகிறார். அரவிந்த் சாமியை கொன்று விட வேண்டும் என எதிரிகள் நினைப்பதை முறியடித்தாரா? சட்டத்துக்கு முன்பாக அரவிந்த் சாமியை நிறுத்தினாரா நாக சைதன்யா என்கிற சேஸிங் படமாகத்தான் இந்த கஸ்டடி உள்ளது.
ரொம்ப ஆவரேஜ்: முதல் பாதி முழுக்கவே கதை சூடு பிடிக்காமல் ரொம்பவே சுமாரான படமாக தியேட்டருக்கு சென்ற ரசிகர்களை பிரேம்ஜியை போல என்ன கொடுமை சரவணா என சொல்ல வைத்து விடுகிறது. இரண்டாம் பாதியில் சேஸிங் காட்சிகள் நிறைந்து இருந்தாலும், அடிக்கடி அதே காட்சிகள் ரிபீட் ஆவதால் படத்தை பெரிதாக ரசிக்க முடியவில்லை என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
செம போரான படம்: வெங்கட் பிரபு படத்தில் என்டர்டெயின்மென்ட் தான் ஹைலைட்டே. ஆனால், இந்த படத்தில் அது டோட்டலாக மிஸ்ஸிங். முதல் அரை மணி நேரம் ரசிகர்களை தாலாட்டி தூங்க வைக்காமல் டார்ச்சர் செய்து தூங்க வைத்து விடுகிறார். ஸ்டோன் ஃபேஸ் உடன் நாக சைதன்யா நடிப்பது பிளாஸ்டிக்காக தெரிகிறது. க்ரித்தி ஷெட்டியுடனான ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் ஒரு பாடல் கூட கேட்கும்படியாக இல்லை என ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
ரசிகர்கள் கொண்டாட்டம்: நாக சைதன்யாவின் போஸ்டருக்கு பாலாபிஷேகம் செய்து விட்டு குத்தாட்டம் போட்டு கஸ்டடி படம் வெளியானதை அவரது ரசிகர்கள் கொண்டாடும் வீடியோக்கள் டிரெண்டாகி வருகின்றன.
பிளாக்பஸ்டர்: சரத்குமார், அரவிந்த்சாமி, நாக சைதன்யா சண்டை போடும் அந்த காட்சி வேற லெவல் மிரட்டல். போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் சம்பவங்கள் ரசிக்கும்படியாக உள்ளது. நாக சைதன்யாவுக்கு இந்த படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மாநாடு அளவுக்கு இல்லை: கஸ்டடி திரைப்படம் சுமார் தான் என்றும் சிம்புவின் மாநாடு படம் அளவுக்கு மாஸ் காட்டவில்லை என ரசிகர்கள் இயக்குநர் வெங்கட் பிரபுவை விளாசி வருகின்றனர்.