கொரோனா வைரஸ் கடந்த 2019-ல் சீனாவில் கண்டறியப்பட்டு பின்னர் உலகம் முழுவதும் பரவியது. கொரோனாவை பெருந்தொற்றாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. எனவே கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி மெக்சிகோ நாட்டில் கொரோனா அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை வெகுவாக சரிந்துள்ளது. மேலும் மெக்சிகோவில் உள்ள 95 சதவீதம் மக்கள் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு அதிகாரி ஹியூகோ லோபஸ்-கேடெல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க மெக்சிகோவில் கொரோனா அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வருவதாக அந்த நாட்டின் அரசாங்கம் அறிவித்துள்ளது.