எச்எம்டி குளோபல் (HMD Global) நிறுவனம் நோக்கியாவின் நோக்கியா சி22 ஸ்மார்ட்போனை நேற்று அறிமுகப்படுத்தியது. இந்த மலிவு விலை போன் மிகவும் வலிமையான போனாக இருக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. இதன் மிக முக்கிய அம்சம் என்னவென்றால், இந்த போன் கீழே விழுந்தாலும் சேதமடையாது. Nokia C22 போன் நீண்ட நேர இயக்கத்தை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சின்கேச்சர் மூன்று நாள் பேட்டரி ஆயுள், டூயல் 13MP பின்புற கேமராக்கள் மற்றும் 8MP செல்ஃபி கேமராக்கள், மேம்பட்ட இமேஜிங் அல்காரிதம்கள், ஆக்டா-கோர் செயலி மற்றும் சிறந்த ஆண்ட்ராய்டு™ 13 (கோ வர்ஷன்) உடன் இது ஒரு அவுட் ஆஃப் தி பாக்ஸ் பதிப்பாக வரும்.
Nokia C22: தண்ணீரும் தூசியும் இதை ஒன்றும் செய்ய முடியாது
நோக்கியா C22 ஒரு சிறந்த, ரஃப் பயன்பாட்டுக்கான, நேர்த்தியான ஸ்மார்ட்போன் ஆகும். IP52 ஸ்பிளாஷ் மற்றும் தூசி பாதுகாப்பு, கடினமான 2.5D டிஸ்ப்ளே கிளாஸ் மற்றும் உறுதியான பாலிகார்பனேட் யூனிபாடி டிசைனுக்குள் வைக்கப்பட்டுள்ள கரடுமுரடான உலோக சேஸ் ஆகியவற்றின் காரணமாக இது கீறல்கள் மற்றும் சிதைவுகளிலிருந்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இது நோக்கியாவின் ஒரு வருட மாற்று உத்தரவாதத்துடன் (ரீப்ளெஸ்மெண்ட் கேரண்டி) வருகிறது.
Nokia C22: கேமரா
நோக்கியா சி22 போனில் 13எம்பி டூயல் ரியர் மற்றும் 8 மெகாபிக்சல் முன் கேமரா ஆகியவை இருக்கும். இந்த நோக்கியா போனில் போர்ட்ரெய்ட் பயன்முறை கிடைக்கும். இது சிறந்த புகைப்படத் தரத்தை வழங்கும். 6.5-இன்ச் HD+ டிஸ்ப்ளே, கூடுதல் தெளிவுக்காக ஆட்டோ HDR ஆதரவுடன் திகைப்பூட்டும் தரத்தில் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களைப் படமெடுக்க இந்த போன் மிக உதவியாக இருக்கும்.
Nokia C22: இதன் விலை என்ன?
நோக்கியா C22 நேற்று முதல் இந்தியாவில் சார்கோல், சேண்ட் மற்றும் பர்பிள் நிறங்களில் 4ஜிபி (2ஜிபி + 2ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 6ஜிபி (4ஜிபி + 2ஜிபி விர்ச்சுவல் ரேம்) 64ஜிபி சேமிப்பக கட்டமைப்புகளுடன் கிடைக்கிறது. இதன் விலை ரூ.7999 முதல் தொடங்குகிறது.
மற்றொரு அசத்தல் அறிமுகம்:
சில நாட்களுக்கு முன்னர் நோக்கியா, Nokia 105 4G (2023) -ஐ அறிமுகம் செய்தது. பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டான நோக்கியா, அதன் கிளாசிக் கேண்டி பார் பாணியிலான நோக்கியா 105 4ஜியின் (Nokia 105 4G (2023)) மேம்படுத்தப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்திய பதிப்பில் ஒரு பேட்டரி உள்ளது, இது நீண்ட பேட்டரி ஆயுளை உறுதியளிக்கிறது. இந்த ஃபோன் Alipayஐயும் ஆதரிக்கிறது. இந்த போனின் விலை சீனாவில் 229 யுவான் (சுமார் ரூ.8,300) ஆக வைக்கப்பட்டுள்ளது.
Nokia 105 4G (2023): விவரக்குறிப்புகள்
பழைய நோக்கியா 105 4G உடன் ஒப்பிடும்போது, புதிய பதிப்பு பல பெரிய மேம்படுத்தல்களுடன் வருகிறது. போனில் அதிக பேட்டரி திறன் உள்ளது. இதில் பேட்டரி திறன் 1450mAh -க்கு 42% அதிகரிப்பு, 32ஜிபி சேமிப்பு விரிவாக்கம், புளூடூத் 5.0 மற்றும் மிகு மியூசிக் மற்றும் ஹிமாலயா ஃபன்ஷோவுக்கான ஆதரவு ஆகியவை கிடைக்கின்றன. அதே நேரத்தில், இந்த போனில் குரல் ஒளிபரப்பு செயல்பாடு (வாய்ஸ் பிராட்காஸ்ட் ஃபங்ஷன்) அகற்றப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் நீல நிறங்களில் கிடைக்கும் இந்த போனில் போல்ட் பட்டன் எழுத்துருக்கள் உள்ளன.