Promotion of 68 Gujarat court judges stayed | 68 நீதிபதிகளின் பதவி உயர்வு நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: குஜராத்தின் சூரத் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஹரிஷ் வர்மா உள்ளிட்ட 68 பேருக்கு சமீபத்தில் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதனை எதிர்த்த வழக்கில், 68 பேரின் பதவி உயர்வையும் உச்சநீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

குஜராத்தில் உள்ள சூரத் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஹரிஷ் வர்மாவுக்கு சமீபத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அவருடன் மேலும் 67 பேருக்கும் குஜராத் உயர்நீதிமன்ற பரிந்துரை அடிப்படையில், பதவி உயர்வு வழங்கப்படுவதாக கடந்த ஏப்.,18ம் தேதி அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனை எதிர்த்து குஜராத் நீதித்துறை அதிகாரிகள் ரவிக்குமார் மேத்தா, சச்சின் மேத்தா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

சீனியாரிட்டியை முறையாக பின்பற்றாமல் இடஒதுக்கீடு மூலமாக பதவி உயர்வு வழங்குவது சட்ட விரோதம் என மனுவில் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு, அவசர கதியில் இந்தப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது ஏன் எனக் கேள்வி எழுப்பி இருந்தது. இன்று நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது, ஹரிஷ் வர்மா உள்ளிட்ட 68 பேரின் பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவர்கள் பழைய பதவியிலேயே தொடர வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.