கனவை நனவாக்கிய ‘யார்க்கர் புயல்’ நடராஜன்.. சின்னப்பம்பட்டியில் பிரமாண்ட மைதானம் தயார்! சூப்பர்ல!

சேலம் : கிரிக்கெட் வீரர் நடராஜன், தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில் உருவாக்கியுள்ள கிரிக்கெட் மைதானத்திற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், வீரர்கள் விளையாடுவதற்காக விரைவில் திறக்கப்பட உள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் சிறப்பாக விளையாடி கவனம் ஈர்த்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் டி.நடராஜன். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த இவர், தனது விடாமுயற்சியின் மூலம் இந்திய கிரிக்கெட் அணியிலும் இடம்பெற்றார்.

கடந்த 2020ஆம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் வலை பயிற்சி பந்துவீ்ச்சாளராக இடம்பெற்றார் நடராஜன். அப்போது அந்த தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக விலகியதைத் தொடர்ந்து நடராஜன் ஆடும் வெலன் அணியில் சேர்க்கப்பட்டார்.

அதே தொடரில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியில் இடம்பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் நடராஜன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஸ்டம்புகளை தகர்த்து விக்கெட் வேட்டையைத் தொடங்கினார்.

Chinnapampatti Natarajan Cricket Ground will be opened soon

சேலம் சின்னப்பம்பட்டியில் இருந்து கிளம்பிய யார்க்கர் புயல் சிட்னியை கலங்கடித்தது. நடராஜனின் அசத்தல் ஆட்டம், இந்திய அளவில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் பல்வேறு நட்சத்திர வீரர்களின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக நடராஜனின் யார்க்கர்கள் பெரிதும் பேசப்பட்டன.

இந்நிலையில், நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தில் சொந்தமாக கிரிக்கெட் மைதானம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள அவர், தனது கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் எனக் கூறியுள்ளார்.

Chinnapampatti Natarajan Cricket Ground will be opened soon

நடராஜன் உருவாக்கியுள்ள மைதானத்தில், நான்கு செண்டர் பிட்ச்சுகள், இரண்டு பயிற்சி தடங்கள், ஜிம், கேண்டீன் மற்றும் 100 பார்வையாளர்கள் தங்கக்கூடிய ஒரு மினி கேலரி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவரது கிரிக்கெட் அகாடமி மூலம் திறமையுள்ள, கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களை அதிகம் உருவாக்க முடியும் என்று நடராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நடராஜன் கிரிக்கெட் மைதானம் முழுமையாக தயாராகியுள்ளதை அடுத்து, ஒரு வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, விரைவில் கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் வகையில் மைதானம் திறக்கப்படும் என்று நடராஜன் தெரிவித்துள்ளார்.

Chinnapampatti Natarajan Cricket Ground will be opened soon

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.