கர்நாடக சட்டமன்ற தேர்தல் மே 10ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து வெளிவந்த எக்ஸிட் போல் முடிவுகள்
காங்கிரஸ்
கட்சி சாதகமாக அமைந்துள்ளன. அதேசமயம் தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் கணக்கு போட தொடங்கியுள்ளது.
கிங் மேக்கர் குமாரசாமி
முதல்வர் நாற்காலி, முக்கிய துறைகள் உள்ளிட்ட கண்டிஷன்களுக்கு ஒத்து வந்தால் தான் கூட்டணி என குமாரசாமி தற்போதே கறார் காட்ட ஆரம்பித்து விட்டார். பாஜக, காங்கிரஸ் என இருதரப்பும் தங்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறி பரபரப்பை கொளுத்தி போட்டுள்ளார். மறுபுறம் பாஜக ஆட்சியை தக்க வைத்து கொள்ள திரை மறைவு அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
கர்நாடக தேர்தல் முடிவுகள்
இந்நிலையில் நாளை (மே 13) வெளியாகும் தேர்தல் முடிவுகளில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்கள் கிடைக்கும்? தனிப் பெரும்பான்மை உடன் கூடிய வெற்றியை அளிக்குமா? தொங்கு சட்டமன்றம் அமைந்தால் யார், யாருடன் கூட்டணி வைப்பர்? என சின்னதாய் ஓர் அரசியல் கணக்கு போட்டு பார்க்கலாம்.
வெற்றி வாய்ப்பு
கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதில் 113 இடங்களை கைப்பற்றும் கட்சியே தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கும். இனி கட்சி வாரியாக வெற்றி, தோல்வி, கூட்டணி வாய்ப்புகளை அலசலாம்.
பாஜக
காங்கிரஸ்
மதச்சார்பற்ற ஜனதா தளம்
பாஜக vs காங்கிரஸ்
தற்போதைய சூழலில் கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் தனிப்பெரும்பான்மை பெற பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்கு தான் வாய்ப்பிருக்கிறது. எனவே ஆட்சி அமைக்க போதுமான இடங்களை பெறுமா? இல்லையா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக முன்வந்து நிற்கிறது. 5 சீட் வரை எப்படியாவது சிறிய கட்சிகள், சுயேட்சைகள் மூலம் சமாளித்து கொள்ளலாம்.
10 சீட்களுக்கு மேல் தேவை என்றால் பாஜக, காங்கிரஸ் என இரண்டு கட்சிகளுக்கும் நெருக்கடி தான். மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு பிரகாசமான வாய்ப்புகள் உருவாகி விடும். எனவே முடிவுகளை தெரிந்து கொள்ள நாளை பிற்பகல் வரை காத்திருப்போம்.