இஸ்லாமாபாத்: ஊழல் வழக்கு விசாரணைக்கு, பலத்த பாதுகாப்புடன் இம்ரான்கான் இன்று(மே 12) இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் விலகிய பின், அவர் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்டல் உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், அல்காதிர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இம்ரானை 8 நாள் காவலில் வைத்து விசாரிக்க, பொறுப்புடைமை நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த கைது சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி, இம்ரான் கான் தரப்பு பாக்., உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அப்போது, இம்ரான் கான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது என தெரிவித்த நீதிபதிகள், அவரை உடனடியாக விடுவிக்கும்படி உத்தரவிட்டனர். இஸ்லாமாபாத் நீதிமன்றம் அறக்கட்டளை வழக்கை இன்று விசாரிக்க வேண்டும். அப்போது, நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பித்தாலும் அதை நீங்கள் ஏற்க வேண்டும் என, இம்ரான் கானுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பலத்த பாதுகாப்புடன் இம்ரான் கான் இன்று(மே 12) இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement