கடற்படை வரலாற்றில் முதன்முறையாக பெண் மாலுமிகள் கடல் கடமைகளுக்கு நியமிப்பு

கடற்படை பெண் மாலுமிகளுக்கான கடல் கடமைகளுக்கு வாய்ப்பை திறந்து வைக்கும் வகையில் இலங்கை கடற்படை வரலாற்றில் முதல் தடவையாக இரண்டு (02) பெண் அதிகாரிகள் மற்றும் ஐந்து (05) பெண் மாலுமிகள் அடங்கிய முதலாவது பெண் மாலுமிகள் குழு கடல் கடமைகளுக்காக நேற்று காலை (11) இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹுவில் இணைக்கப்பட்டனர்.

இதுவரை ஆண் மாலுமிகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட கப்பல்கள் மற்றும் படகுகளின் கடமைகளுக்கான வாய்ப்பை பெண் மாலுமிகளுக்கு வழங்கும் கடற்படையின் முடிவின்படி, 2022 அக்டோபர் மாததில், பெண் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கு கையாளுதலில் அடிப்படை பாடநெறியை மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது. அங்கு கடலோர ரோந்து கப்பல்கள் விநியோகம், அடிப்படை வழிசெலுத்தல், கடற்படை தொழில்நுட்பம், தீயணைப்பு, செய்தி பரிமாற்றம், போர் முதலுதவி வழங்கள், கப்பல்கள் மற்றும் படகுகளின் மின்சார மற்றும் மின்னணு அமைப்பு பற்றிய தத்துவார்த்த மற்றும் நடைமுறை பயிற்சிகள் திருகோணமலை, கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் வழங்கப்பட்டது.

பிராந்திய கடற்படைகள் மற்றும் உலகின் பல கடற்படைகள் கப்பல்களின் நடவடிக்கைகளுக்கு பெண் மாலுமிகளை ஈடுபடுத்துகின்றன, மேலும் எதிர்காலத்தில் கடல் கடமைகளுக்கு பெண் அதிகாரிகள் மற்றும் பெண் மாலுமிகளை ஈடுபடுத்த இலங்கை கடற்படை எதிர்பார்க்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.