Another blast near the Golden Temple | பொற்கோவில் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு

அமிர்தசரஸ், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் சீக்கிய பொற்கோவில் அருகே நேற்று முன் தினம் இரவு மூன்றாவது முறையாக குண்டு வெடித்ததால், அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.

இங்கு சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படும் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலில், நேற்று முன் தினம் இரவு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதையடுத்து, பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இது குறித்து, பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் கூறியதாவது:

பொற்கோவில் வளாகத்தில் உள்ள குரு ராம்தாஸ் நிவாஸ் கட்டடம் அருகே குண்டு வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

மிக குறைந்த சக்தி உடைய குண்டு வெடித்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, சந்தேகத்தின் அடிப்படையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுஉள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து சிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டி தலைவர் ஹர்ஜிந்தார் சிங் தாமி கூறுகையில், ”கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பொற்கோவில் அருகே மூன்று குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன.

”முதல் இரண்டு சம்பவங்களுக்குப் பின்னும், போலீசார் எச்சரிக்கையுடன் செயல்படாததே, மூன்றாவது குண்டுவெடிப்பு நடந்ததற்கு காரணம்,” என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.