பிரபல ரியாலிட்டி ஷோர் நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை விற்க முயன்றதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று முன்தினம் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே நடைபெற்று முடிந்தது.
எனினும் போட்டி நடந்த அன்று விஜய் தொலைக்காட்சி பிரபலமான நாஞ்சி விஜயன், ரூ. 1500 மதிப்பிலான டிக்கெட்டை ரூ. 6500-க்கு விற்பனை செய்துள்ளார். இதற்கான அறிவிப்பை தனது வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸாக அவர் வைத்துள்ளார்.
அதேபோன்று துணை நடிகையாக கும்தாஜும் ரூ. 1500 மதிப்பிலான ஐபிஎல் மேட்ச் டிக்கெட்டுகளை ரூ. 5000-க்கு விற்பனை செய்வதாக கூறி தனது வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார்.
ஐ.பி.எல் டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்றால் போலீஸ் கைது செய்யும் என்பது தான் சட்டம். ஆனால் பிரபலங்களாக இருப்பவர்கள் சட்டத்தை மீறி நடப்பது மட்டுமில்லாமல், அதை மற்றவர்கள் செய்ய ஊக்குவிக்கும் விதமாக தங்களுடைய வாட்ஸ் அப்பில் ஸேட்டஸ் வைப்பது அநாகரீகத்தின் உச்சம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.