பாலக்காடு:”கேரள மாநிலம், அட்டப்பாடியில் சிசு இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து, ஆய்வு செய்ய வேண்டும்,” என, மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடியில், சிசு இறப்பு குறித்து, மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா தலைமையில், ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தை துவக்கி வைத்து அமைச்சர் பேசியதாவது:
பழங்குடியினர் வளர்ச்சிக்காக செயல்படுத்தும் மத்திய அரசின் திட்டங்கள், அவர்களுக்கு முழுமையாக கிடைப்பதற்கு, மாநிலத்தில் ‘நோடல்’ அதிகாரி பணியமர்த்த வேண்டும்.
பழங்குடியின மக்கள் குடியேறியவர்களோ, நிலமற்றவர்களோ அல்ல. அரசு அவர்களுக்கு தொழில்நுட்ப ரீதியாக நிலத்தின் உரிமையை மட்டுமே வழங்குகிறது.
கேரள மாநிலத்தின் மக்கள் தொகையில், பழங்குடியினர் 2 சதவீதம் உள்ளனர். பழங்குடியினருக்கு 75 ஆண்டுகள் ஆகியும், இன்னும் நிலம் வழங்கப்படவில்லை.
அட்டப்பாடியில், பிறந்து சில நாட்கள், வாரங்கள், மாதங்களில் சிசு இறப்பு ஏற்படுகிறது. சிசு இறப்பு எண்ணிக்கை உயர்வது ஆபத்தானது. இதுறித்து பரிசோதிக்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement