குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சூர்யகுமார் யாதவ் மிரட்டல் சதம்
வான்கடே மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 218 ஓட்டங்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் 103 ஓட்டங்கள் விளாசினார். ரஷீத் கான் 4 விக்கெட்டுகளை சரித்தார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்களான கில் (6) மற்றும் சஹா (2) ஆகியோரை ஆகாஷ் தனது மிரட்டலான பந்துவீச்சில் வெளியேற்றினார்.
பின்னர் வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 4 ஓட்டங்களில் நடையைக் கட்டினார். தமிழக வீரர் விஜய் சங்கர் தனது பங்குக்கு 14 பந்துகளில் 29 ஓட்டங்கள் எடுத்தார்.
@IPL (Twitter)
கடைசி வரை அதிரடியாக போராடிய ரஷீத் கான்
அதிரடியில் மிரட்டிக் கொண்டிருந்த டேவிட் மில்லரை 41 ஓட்டங்களில் ஆகாஷ் ஆட்டமிழக்க செய்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும் ரஷீத் கான் வாணவேடிக்கை காட்டினார்.
இறுதிவரை களத்தில் நின்ற அவர் 32 பந்துகளில் 79 ஓட்டங்கள் குவித்தார். இதில் 10 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கும். குஜராத் டைட்டன்ஸ் 191 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால், மும்பை அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை இந்தியன்ஸின் ஆகாஷ் 3 விக்கெட்டுகளும், பியூஷ் சாவ்லா மற்றும் குமார் கார்த்திகேயா தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 7வது வெற்றி ஆகும். இதன்மூலம் அந்த அணி ஏறக்குறைய அடுத்த சுற்றினை உறுதி செய்துவிட்டது.
Despite a late charge from Rashid Khan, @mipaltan get the all important 2️⃣ points and continue their winning streak 🙌#MI win by 27 runs
Scorecard: https://t.co/o61rmJX1rD#TATAIPL | #MIvGT pic.twitter.com/ojNPoXiSDZ
— IndianPremierLeague (@IPL) May 12, 2023