ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஒடிசாவில் இருந்து வரும் யானை கூட்டம் கிராமங்களில் உள்ள வயல்வெளிகளில் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றனர்.
யானைகளை தடுக்க வனத்துறையினரிடம் விவசாயிகள் தொடர்ந்து முறையிட்டும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததால் யானை கூட்டத்திடமிருந்து விளைநிலங்களை பாதுகாத்துக் கொள்ள விவசாயிகள் மின்வேலி அமைத்துள்ளனர்.இந்நிலையில் பார்வதிபுரம் மன்யம் மாவட்டம் பாமணி அடுத்த கத்ரக்கடா பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிக்கு வந்த 6 யானைகள் அடங்கிய கூட்டம் வயலை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த மின்வேளியில் சிக்கியது.
இதில் நிகழ்வு இடத்திலேயே 4 யானைகள் உயிரிழந்தன. உயிர் தப்பிய 2 யானைகளுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்க வருகின்றனர்.
இந்நிலையில் சித்தூர் மாவட்டம் குப்பம் அடுத்த மலையனூர் கிராமத்தில் யானை தாக்கியதில் உஷா என்ற பெண்ணும், சிவலிங்கம் என்பவரும் உயிரிழந்தனர். சுற்றுவட்டார கிராம மக்கள் யானை தாக்கி இருவரும் உயிரிழந்ததால் அச்சத்தில் உறைந்துள்ளனர்.