அதிமுகவை நெருங்கும் சிக்கல்… எடப்பாடிக்கு பெரிய சறுக்கல்… இப்படி கோட்டை விட்றாங்களே?

அதிமுக எடப்பாடி பழனிசாமி கைவசம் வந்துவிட்டதே. இனிமேல் என்ன பிரச்சினை? தேர்தல் வியூகம், ஸ்வீட் பாக்ஸ் விநியோகம், மக்களை கவரும் வாக்குறுதிகள், தொண்டர்கள் படை என அதிரடியாக இறங்கி வெற்றிகளை குவிக்க வேண்டியது மட்டும் தான் பாக்கி என எண்ணிவிட முடியாது. அதிமுகவிற்கு மிகப்பெரிய சிக்கல், எடப்பாடி பழனிசாமிக்கு அக்னி பரீட்சை இனிமேல் காத்திருக்கிறது. ஏனெனில் தேர்தல் வெற்றி என்பது சாதாரணமாக கிடைத்துவிடாது. அதற்கு ஒற்றுமை என்பது மிகவும் அவசியம்.

​அதிமுகவில் தனித்தனி அணிகள்தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்றிணைந்த அதிமுகவாக இருக்கிறதே? என நீங்கள் கேட்கலாம். ஆனால் ஏற்கனவே பிரிந்து சென்ற தலைவர்கள், அவர்களுக்கான ஆதரவு வாக்குகளை அதிமுக தவறவிடுகிறது என்பதை மறந்துவிட வேண்டாம். சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் என மூவருக்கும் சமூக ரீதியில், பகுதி வாரியாக செல்வாக்கு இருக்கிறது. ஒன்றிணைந்த கட்சியாக இருக்கும் பட்சத்தில் அதிமுகவிற்கு அந்த மக்கள் வாக்களிப்பர்.
​எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும்இப்படி சசிகலா ஒருபக்கம், டிடிவி தினகரன் மறுபக்கம், ஓ.பன்னீர்செல்வம் மற்றொரு பக்கம் என பிரிந்து நின்றால் அதிமுகவிற்கு வாக்கு செலுத்த வேண்டும் என எப்படி நினைப்பார்கள். செல்வாக்கு பெற்ற வேறொரு கட்சிக்கு போட்டு விட்டு செல்லலாம். இல்லையெனில் வாக்கே செலுத்தாமல் போய்விடலாம். இவையெல்லாம் அதிமுகவிற்கு பின்னடைவு தான். இங்கே ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு பின்னர் கட்சியின் முகமாக, அதிகாரமிக்க ஒற்றை தலைமையாக அதிமுகவில் யாரும் ஜொலிக்கவில்லை.​
​​
வாக்கு வங்கி சிதறல்சசிகலா சிறை சென்றதால் அந்த வாய்ப்பு கைநழுவி போனது. டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கியதால் வாக்கு வங்கி உடைந்தது. எடப்பாடி பழனிசாமி ஒரு பகுதிக்கான தலைவர் மட்டுமே என்பது 2021 சட்டமன்ற தேர்தலில் நிரூபணமானது. தான் சார்ந்த கொங்கு மண்டலத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்து செல்வாக்கை உறுதி செய்தார். அதுவே தென் மாவட்டங்களில் தலைவர்கள் பிரிந்து நின்றதால் வாக்குகளும் சிதறின. கடந்த தேர்தலில் அதிமுக 39.72 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. ஆட்சி அமைக்க இன்னும் 5.66 சதவீத வாக்குகளை பெற்றிருந்தால் போதும்.
​எடப்பாடிக்கு அதிகாரம்அதாவது பெரிய வித்தியாசம் இல்லை. தற்போதைய சூழல் தொடர்ந்தால் மேற்குறிப்பிட்ட வித்தியாசம் என்பது வரும் தேர்தல்களில் மேலும் அதிகரிக்கக் கூடும். எனவே அனைத்து தரப்பினரையும் எடப்பாடி பழனிசாமி அரவணைத்து செல்ல வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக விவாதம் ஒன்றில் பேசிய அரசியல் திறனாய்வாளர் தராசு ஷியாம், அதிமுகவில் ஒருவரை ஒருவர் மாறி மாறி குறை கூறி வருகின்றனர். எடப்பாடி கையில் கட்சியும், இரட்டை இலைக்கு கையெழுத்து போடும் அதிகாரமும் இருக்கின்றன.
​ஒன்றுபட்ட அதிமுகஆனால் அது தேர்தல் வெற்றியாக மாற வேண்டும். அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கி நிறைய குறைந்திருக்கிறது. நீங்கள் கிராமப் பகுதிகளுக்கு சென்றால் நன்றாக புரிந்து கொள்ள முடியும். அடுத்த நூறாண்டுகள் அதிமுகவின் ஆட்சி தொடரும் என்று ஜெயலலிதா கூறியிருந்தார். அப்படியிருக்க வெற்றிக்கான வழியை அதிமுக தலைமை சிந்தித்த மாதிரி தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்ட அனைவருமே பகுதி தலைவர்கள் தான். இதை வைத்து ஒன்றுபட்டு நின்றால் வெற்றி சாத்தியமே.
​டெல்லியில் கறார் பேச்சுஆனால் எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக இருக்கிறார். டெல்லியில் வைத்து யாரையும் சேர்த்து கொள்ள முடியாது எனக் கூறிய போதே வெற்றிக்கான வாய்ப்புகள் கோட்டை விட்டதாகவே பார்க்கப்படுகிறது. கர்நாடக தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில், மக்களவை தேர்தல் முன்கூட்டியே வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றன. சொல்லப் போனால் இன்னும் 4, 5 மாதங்களில் தேர்தல் வந்துவிடும். எனவே எத்தனை தொகுதிகளில் எடப்பாடி தலைமையால் ஜெயிக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.​
​​
​தேர்தல் வெற்றிக்கு சிக்கல்தலைமை என்பது அனைவரும் அரவணைத்து செல்லும் போக்கு. அப்படி இருந்தால் தான் சரியான அணியை, வலிமையான அணியை வழிநடத்தி செல்ல முடியும். தான் மட்டுமே முந்தி செல்கிறேன் என்று சொன்னால் அது சரியாக இருக்காது. தன் தலைமையில் வெற்றி என்று எடப்பாடி பழனிசாமி கூறுவது சாத்தியமில்லை. இதை அவர் உணர வேண்டும் என்று குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.