அரசினால் வழங்கப்படும் தொழிற்சார் கற்கை நெறிகளை கற்பதற்கான ஆர்வம் குறைந்து காணப்படுகின்றது- மாகாண பணிப்பாளர்

அரசினால் இலவசமாக வழங்கப்படும் தொழில்சார் கற்கைநெறிகளில் முயற்சியாளர்கள் கலந்துக்கொள்ளாத நிலை காணப்படுவதாக மாகான தொழிற்றுறை திணைக்கள பணிப்பாளர் எஸ்.வனஜா தெரிவித்தார்.

இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வடக்கு மாகாண கைத்தொழிற்றுறை மேம்பாட்டுக்கான கொள்கைத்திட்ட வகுப்பை உருவாக்குவதற்கான கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொழில்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்தில் தும்பு தொழிற்சாலை தொடர்பான கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் கற்கைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகின்றது. இந்த பயிற்சிநெறி இலவசமாக வழங்கப்படுவதுடன் நாளுக்கு 200ரூபாய் வீதம் பணமும் வழங்கப்படுகின்றது.

வடமாகாணத்தில் அதிக வருமானம் தரும் தொழிலாக தும்பு தொழில் காணப்பட்ட போதும் இவ்வாறான கற்கைநெறிகளுக்கு முயற்சியாளர்களின் வருகையின்மை காணப்படுவதாக மாகாண பணிப்பாளர் செ.வனஜா தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.