A fine of Rs 30 lakh was imposed on Air Indias friend who entered the cockpit | பைலட் அறைக்குள் வந்த தோழி ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்

புதுடில்லி, ‘ஏர் இந்தியா’ விமான பைலட், ‘காக்பிட்டு’க்குள் தன் தோழியை அனுமதித்த விவகாரம் தொடர்பாக அந்நிறுவனத்திற்கு 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, டி.ஜி.சி.ஏ., எனப்படும் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

பிப்., 27ல், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து, புதுடில்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது.

அப்போது விமானி ஒருவர், காக்பிட் எனப்படும் விமானிகள் அறைக்குள், தன் தோழியை அனுமதித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

விமானப் போக்கு வரத்துத் துறையின் விதிகளின்படி, விமானிகளை தவிர வேறு எந்த நபருக்கும் அவர்களது அறையில் அனுமதி கிடையாது.

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து டி.ஜி.சி.ஏ., சார்பில் நடத்தப்பட்ட விசாரணை சமீபத்தில் நிறைவுற்றது. இதுதொடர்பாக டி.ஜி.சி.ஏ., நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பயணியரின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல், பைலட் தன் தோழியை, காக்பிட்டுக்குள் அனுமதித்துள்ளார்.

‘இதற்காக, ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

‘மேலும், சம்பந்தப் பட்ட பைலட்டின் உரிமம், மூன்று மாத காலத்திற்கு ரத்து செய்யப்படுகிறது’ என குறிப்பிடப் பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.