மீண்டும் அதிகரித்துள்ள தங்கம் விலை!!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் ஒரு பவுன் தங்கத்தின் விலை 46,000 ரூபாயைக் கடந்து உச்சத்தை தொட்டது. அதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் 46,000 ரூபாயை நெருங்குகிறது.

மே மாத தொடக்கத்தில் தங்கம் விலை உச்சத்தை தொட்டதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது.

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து 5,715 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.45,720 ஆக விற்பனையாகிறது. 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 அதிகரித்து 4,681 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.64 அதிகரித்து ரூ. 37,448 ஆக விற்பனையாகிறது.

வெள்ளி நேற்றைய விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.78.50 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,500 எனவும் விற்பனையாகிறது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.