ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மரணம்! நடுநடுங்க வைக்கும் படகு விபத்து


இந்தியாவின் கேரள மாநிலத்தில் நடந்த படகு விபத்தில் 22 பேர் மரணமடைந்த நிலையில், அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர்கள் பலியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே குடும்பத்தில் 11 பேர்

கேரள மாநிலத்தில் நடந்த படகு விபத்து, சர்வதேச அளவில் பிரபல ஊடகங்களில் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில், அந்த விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தில் 11 பேர் பலியாகியுள்ள தகவல் வெளியாகி அப்பகுதி மக்களை நொறுங்க வைத்துள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மரணம்! நடுநடுங்க வைக்கும் படகு விபத்து | Boat Tragedy Man Lost 11 Members Of His Family @manoramaonline

குன்னும்மல் சைதலாவி என்பவரது குடும்பத்தினர் 11 பேர்கள் அந்த படகு விபத்தில் மரணமடைந்துள்ளனர்.
மலப்புறம் மாவட்டத்தில் அமைந்துள்ள ’தூவல் தீரம்’ என்ற சுற்றுலா பகுதிக்கு படகில் பயணித்த நிலையிலேயே விபத்து நேர்ந்துள்ளது.

படகு ஒன்று விபத்தில் சிக்கிய தகவல் வெளியானதும் சைதலாவி தமது குடும்பத்து உறுப்பினர்களுக்கு மொபைலில் தொடர்பு கொண்டுள்ளார்.
பல முறை முயன்றும் எவரையும் தொடர்புகொள்ள முடியவில்லை என சைதலாவி, கண்ணீருடன் செய்தி ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்த பகுதிக்கும் சில கி.மீற்றர் தொலைவில் தான் சைதலாவி மற்றும் அவரது சகோதரர் சிராஜ் ஆகியோர் தங்கள் தாயார் மற்றும் குடும்பத்தினருடன் குடியிருந்து வருகின்றனர்.

ஆபத்தில் முடியலாம் என எச்சரிக்கை

இந்த நிலையில், சம்பவத்தன்று குடும்ப உறுப்பினர்கள் 19 பேர்கள் சேர்ந்து தூவல் தீரம் பகுதிக்கு பயணப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே சைதலாவி தமது குடும்ப உறுப்பினர்களை படகு சவாரி செய்ய வேண்டாம், பாதுகாப்பாக இருக்காது, ஆபத்தில் முடியலாம் என எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மரணம்! நடுநடுங்க வைக்கும் படகு விபத்து | Boat Tragedy Man Lost 11 Members Of His Family @manoramaonline

இந்த நிலையில், படகுதுறையில் இருந்து குடியிருப்புக்கு திரும்பலாம் என அந்த குடும்பம் முடிவு செய்த நிலையில், படகு சாரதி டிக்கெட் விலையில் பெரிய தள்ளுபடிகள் மற்றும் குழந்தைகளுக்க்கு இலவசம் என அறிவித்தது இவர்களை மீண்டும் படகு சவாரிக்கு தூண்டியுள்ளது.

விபத்திற்குள்ளான படகில் அப்போது 50 பயணிகள் இருந்துள்ளனர். மட்டுமின்றி, இருள் சூழ்ந்த பிறகு படகு சவாரி முன்னெடுக்க அந்த சாரதிக்கு அனுமதியும் இல்லை என கூறப்படுகிறது.

இதனிடையே, படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கிய தகவல் வெளியாக சைதலாவி, சம்பவப்பகுதிக்கே விரைந்துள்ளார்.
மட்டுமின்றி, தனியாக ஒரு படகை அமர்த்திய அவர், விபத்து நடந்த இடத்தில் சென்றுள்ளார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மரணம்! நடுநடுங்க வைக்கும் படகு விபத்து | Boat Tragedy Man Lost 11 Members Of His Family @manoramaonline

சைதலாவி குடும்பத்தில் மொத்தம் 19 பேர்கள் தூவல் தீரம் சென்ற நிலையில் நால்வர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.