Tamilnadu Governor: அந்த தகவல் தவறானது… தமிழ் நாடு கவர்னர் மாளிகை பரபரப்பு விளக்கம்!

தமிழக ஆளுநராக இருப்பவர் ஆர்என் ரவி. ஆர்என் ரவிக்கும் தமிழக அரசுக்கும் ஆரம்பத்தில் இருந்தே பிரச்சனையாக உள்ளது. ஆளுநர் தேவையில்லாமல் தமிழக அரசின் நிர்வாக அதிகாரத்தில் தலையிடுவதாகவும் தமிழக அரசை குறை கூறி வருவதாகவும் திமுக அரசு குற்றம்சாட்டி வருகிறது. கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஆளுநர் ஆர்என் ரவிக்கு தமிழக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் ஆளுநர் ஆர்என் ரவி தனது வேலையில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை சந்தித்து அவர்களுடன் உரையாடினார். இந்நிலையில் தற்போது ஆளுநர் மாளிகை ஒரு பரபரப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், பீகாரைச் சேர்ந்த தனிநபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆளுநர் பரிந்துரைத்ததாக தவறான தகவல் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. அந்த தகவல் உண்மை இல்லை என்பதை தெளிவுப்படுத்துகிறோம். தமிழக ஆளுநர் அப்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. எந்த தனி நபர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எந்த அனுமதியும் கொடுக்கவில்லை.

உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம். தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக ஆளுநர் மாளிகையில் ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் கீழ் கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக தமிழகம் வந்த பீகார் மாணவர்களுடன் ஆளுநர் ஆர்என் ரவி உரையாற்றினார். அப்போது திருக்குறளின் பெருமையையும் தமிழகத்தின் பழமையான கலாச்சாரத்தையும் புகழ்ந்து பேசினார். மேலும் வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் சகஜம்தான், சறுக்கல்களை சந்திக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது என்றும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.