WhatsApp Alert! சர்வதேச எண்களில் இருந்து அழைப்பு வந்தால் உடனே இதை செய்யுங்கள்!

WhatsApp Alert! மோசடிக்கார கும்பலை சேர்ந்தவர்கள் மக்களை ஏமாற்றி பணம் பறிக்க வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்களை கருவியாக பயன்படுத்தி வருகின்றனர்.  வாட்ஸ் அப்பில் லிங்குகளை அனுப்புவது அல்லது செயலிகளை டவுன்லோடு செய்ய சொல்வது என செய்துகொண்டு இருந்தவர்கள் தற்போது சர்வதேச எண்களில் இருந்து அழைப்பு மற்றும் செய்தி அனுப்புதல் மற்றும் பயனர்களுக்கு பகுதி நேர வேலைகளை வழங்குவது என இந்த புதிய வழிகளில் மோசடி செய்கின்றனர்.  இந்தியர்களை பொறுத்தவரை பகுதிநேர வேலையை பெரிது விரும்புகின்றனர், இதனாலேயே மோசடிக்காரர்கள் இந்த யுக்தியை கையில் எடுத்திருக்கின்றனர்.  பகுதி நேர வேலைவாய்ப்பு மூலமாக மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணத்தை திருடுகின்றனர்.  ​​

கடந்த சில வாரங்களாக இந்த அழைப்புகள் மிகவும் சாதாரணமாகி விட்டது.  பல இந்தியர்கள் ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில், வாட்ஸ்அப்பில் சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த அழைப்புகள் மற்றும் செய்திகள் பெரும்பாலும் தெரியாத எண்களில் இருந்து வருகின்றன, இந்த அழைப்புகளால் மக்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது.  தொடர்ந்து வாட்ஸ் அப்பில் இதுபோன்ற அழைப்புகளையோ அல்லது மெசேஜ்களையோ பெறுபவர்கள் எவ்வித பதற்றமும் இல்லாமல் உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள சில பயனுள்ள விஷயங்களை செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.

1) வாட்ஸ் அப்பில் தெரியாத என்னிலிருந்து வரக்கூடிய அழைப்பிற்கு பதிலளிக்க வேண்டாம், இதுவரை உங்களுக்கு பரிச்சயமில்லாத சர்வதேச எண்ணிலிருந்து அழைப்பைப் பெற்றால், அதற்குப் பதிலளிப்பதைத் தவிர்ப்பது நல்லது.  அத்தகைய அழைப்புகளுக்கு அல்லது செய்திகளுக்கு நீங்கள் பதிலளிக்கும்போது நீங்கள் மோசடியில் சிக்கிக்கொண்டு பணத்தை இழப்பதற்கான அபாயம் ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது.

2) சர்வதேச எண்ணிலிருந்து உங்களுக்கு பரிசு வழங்குவதாகவோ அல்லது லாட்டரியில் உங்களுக்கு வெற்றி கிடைத்திருப்பதாகவோ யாரேனும் அழைப்பு விடுத்தாலோ அல்லது செய்தி அனுப்பினாலோ கண்டிப்பாக அது மோசடியாக இருக்கக்கூடும் என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.  எனவே இதுபோன்ற செய்திகள் நீங்கள் பெற்றால் அந்த செய்திகளுக்கு பதிலளிக்க வேண்டாம், தேவைப்பட்டால் வாட்ஸ்அப்பில் புகாரளிக்க வேண்டும்.

3) ஒரே சர்வதேச எண்ணிலிருந்து பல அழைப்புகளைப் பெற்றால், அந்த எண்ணை உடனடியாக பிளாக் செய்வது நல்லது.  கால் லாக் பகுதியில் உள்ள எண்ணை  டேப் செய்து, அந்த எண்ணை பிளாக் செய்வதற்கான ஆப்ஷனை தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் அந்த எண்ணை பிளாக் செய்யலாம்.

4) சர்வதேச எண் ஸ்பேம், மோசடி அல்லது பிற தீங்கிழைக்கும் செயல்களுடன் தொடர்புடையதாக நீங்கள் நம்பினால், அந்த எண்ணை வாட்ஸ் அப்பிற்க்கு புகாரளிக்கலாம்.  இதைச் செய்ய, உங்கள் கால் லாக் பகுதியில் உள்ள அந்த எண்ணைத் தட்டி, எண்ணைப் புகாரளிப்பதற்கான ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

5) அங்கீகரிக்கப்படாத அணுகலில் இருந்து உங்கள் வாட்ஸ் அப் கணக்கை மேலும் பாதுகாக்க, இரண்டு காரணி அங்கீகாரத்தை இயக்க வேண்டும்.  உங்கள் கணக்கில் உள்நுழையும்போது உங்கள் பாஸ்வேர்டுடன் கூடுதலாக சரிபார்ப்புக் குறியீடு உள்ளிடப்பட வேண்டும்.  இதை இயக்குவதன் மூலம் உங்கள் கணக்கு பாதிக்கப்படும்.

வாட்ஸ் அப் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக நீங்கள் பயன்படுத்தி கொண்டிருக்கும் மெசேஜிங் தளங்களை பயன்படுத்தும்போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.  அதிலும் ​​குறிப்பாக உங்களுக்கு இதுவரை தெரியாத சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகள் மற்றும் செய்திகளைப் பெறும்போது நீங்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டியது முக்கியம்.  மேற்கண்ட வழிமுறைகளை நீங்கள் பின்பற்றுவதன் மூலம், மோசடிகள் மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்களிலிருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.