பிரித்தானிய இளைஞர் ஒருவரை கொலை செய்வதற்காக, ஆசை காட்டி வரவழைப்பதற்காக ஒரு அழகிய இளம்பெண் பயன்படுத்தப்பட்டதாக கருதப்பட்ட வழக்கில், அந்த இளம்பெண்ணும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் குழப்பம் உருவாகியுள்ளது.
காட்டுக்குள் சென்ற பிரித்தானிய இளைஞர்
பிரித்தானியரான Steven Graham (60)க்கும் தாய்லாந்து நாட்டவரான Ooy Taotaக்கும் பிறந்த மகன் பென் (Woramet Ben Taota, 16).
கடந்த 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, பென் தெற்கு தாய்லாந்தில் உள்ள காடு ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
விசாரணையில், அவர் கடைசியாக, ஹம்சா (Suraphltchaya Khamsa, 15) என்ற பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் சென்றது CCTV காட்சிகள் மூலம் தெரியவந்தது.
ஹம்சாவை விசாரிக்கலாம் என்றால் அவரையும் காணவில்லை.
ViralPress
இந்நிலையில், பென் மாயமான இடத்தில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் சந்தேகத்துக்குரியவகையில் சுற்றிக்கொண்டிருந்தது CCTV காட்சிகள் மூலம் தெரியவந்தது.
அவரது பெயர் சைவாட் (Chaiwat Boongarin, 44) குற்றத்தை முதலில் மறுத்த சைவாட், பின்னர் பென்னைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இளம்பெண்ணின் உடலும் கண்டுபிடிப்பு
இதற்கிடையில், காணாமல்போன ஹம்சாவின் உடல் ஓரிடத்தில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Suraphltchaya Khams-Ben Taota(ViralPress)
பெண்ணை ஆசை காட்டி காட்டுக்குள் கொண்டு வர ஹம்சா பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரும் கொல்லப்பட்டுள்ளதால் வழக்கில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சைவாட்டிடம் ஹம்சா குறித்து விசாரித்தால், தான் பென்னை மட்டுமே கொலை செய்ததாகவும், ஹம்சா குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், சைவாட் ஒரு பாலியல் குற்றவாளி என்பதால், ஹம்சா வன்புணரப்பட்டாரா என்பதை அறிவதற்காக, அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
ViralPress