தமிழ் சினிமாவில் 90 களில் சில படங்களில் ஹீரோவாக நடித்தவர் சரவணன். அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். இந்நிலையில் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் சரவணன் மீது அவரது மனைவி அளித்துள்ள புகார் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
நடிகர் சரவணனுக்கு ‘பருத்தி வீரன்’ படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தப்படத்தில் இவரின் சித்தப்பா கதாபாத்திரத்தை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இவர் தவறான கருத்துக்களை பேசியதாக சர்ச்சைகள் கிளம்பியது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இதனால் இந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து கடந்த வரும் சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி விமர்சனரீதியாக வரவேற்பை பெற்ற ‘கார்கி’ படத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார். தற்போது நெல்சன் இய்க்கத்தியில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் நடித்து வருகிறார்.
Ileana: பேபி பம்ப் போட்டோவை வெளியிட்ட இலியானா: குவியும் வாழ்த்துக்கள்.!
இந்நிலையில் நடிகர் சரவணனின் மனைவி சூர்யா ஸ்ரீ முதலமைச்சர் தனிபிரிவில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத சமயத்தில் தன்னுடைய சம்பாத்தியத்தில் வாழ்ந்து வந்த சரவணன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானதை தொடர்ந்து வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார்.
மேலும், ‘பருத்திவீரன்’ படத்துக்கு முன்பு அவரிடம் ஒன்றுமே இல்லை. என்னை காதலித்து திருமணம் செய்தார். நான் சம்பாதித்து அவரை பார்த்துக்கொண்டேன். இதனை பிக்பாஸ் போட்டியில் அவரே பலமுறை சொல்லியுள்ளார். என்னை விவாகரத்து செய்யாமல் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். எனக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அதற்கு காரணம் சரவணன் தான். என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்துள்ளார். சரவணன் மீது அவர் மனைவி சுமத்தியுள்ள குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Sneha: வதந்திகள் தவிடு பொடியாகட்டும்.. திருமண நாளில் பிரசன்னா வெளியிட்ட பதிவு.!