டெல்லி : பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை பரிணிதி சோப்ரா நிச்சயதார்த்தம் தடபுடலாக நடந்து முடிந்தது.
இந்த நிச்சயதார்த்தவிழாவில் அரசியல் கட்சி பிரமுகர் முதல் திரைப் பிரபலங்கள் வரை பலரும் கலந்து கொண்டனர்.
தங்கையில் நிச்சயதார்த்தால் கலந்துகொள்வதற்காக பிரியங்கா சோப்ரா, லண்டனில் இந்து டெல்லி வந்தார்.
நடிகை பரிணிதி : 2011ஆம் ஆண்டு Ladies vs Ricky Bahl என்ற படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமானா. முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து Ishaqzaade, Dishoom, Jabariya Jodin போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது இவர்,சாம்கிலா, கச்சுலா கில் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் சாம்கிலா படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டநிலையில் படம் விரைவில் வெளியாக உள்ளது.
பாலிவுட்டில் பிரபலமானார் : பாலிவுட்டில் பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அவருக்கு எதிர்பார்த்த அளவுக் பட வாய்ப்பு அமையாததால், கலர்ஸ் இந்தி தொலைக்காட்சியில் வெளிபரப்பாகி வரும், நகைச்சுவை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
பரிணிதி சோப்ரா,ராகவ் சத்தா: கடந்த சில மாதங்களாக பரிணிதி சோப்ரா, ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராகவ் சத்தாவை காதலிப்பதாக சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இதுகுறித்த இருவரும் கருத்துதெரிவிக்காமல் மௌனமாக இருந்த நிலையில், இன்று நிச்சயதார்த்தம் நடைபெறும் எனஅறிவிப்பு வெளியானதை அடுத்து பலரும் இவர்களுக்கு வாழ்த்துதெரிவித்தனர்.
தடபுலான நடந்த நிச்சயதார்த்தம் : இதையடுத்து, பரிணிதிசோப்ரா தனது இன்ஸ்டாகிராமில் ராகவ் சத்தாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நிச்சயதார்த்ததை உறுதிப்படுத்தினார். இவர்களின் நிச்சயதார்த்தம் கனாட் பிளேஸில் உள்ள கபுர்தலா ஹவுஸ் தடபுடலாக நடைபெற்றது. தங்கையின் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வற்கான நேற்றே பிரியங்கா சோப்ரா லண்டனில் இருந்து டெல்லி வந்தார்.
கலந்து கொண்ட பிரபலங்கள் : கோலாகலமாக நடந்த இந்தவிழாவில்,டெல்லி முதலமைச்சர் ஆரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சுக்லா,இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் என பல அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் பல சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். நிச்சயதார்த்த விழாவின் வீடியோக்கள் மற்றும் படங்கள் எதுவும் கசிந்துவிடக்கூடாது என்பதற்காக, பிரபலங்களின் செல்போனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.