ஐபிஎல்லில் முதல் சதம் அடித்த இளம் வீரர்..அனல் பறந்த ஆட்டம்


டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக சதம் விளாசினார்.

முதல் சதம் அடித்த இளம் வீரர்

ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

முதலில் ஆடிய பஞ்சாப் அணியில் கேப்டன் ஷிகர் தவான் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

ஆனால் 22 வயது இளம் வீரரான பிரப்சிம்ரன் சிங் அதிரடியில் அதகளம் செய்தார். சிக்ஸர், பவுண்டரிகள் என விளாசிய அவர், 61 பந்துகளில் சதம் அடித்தார்.

இது அவருக்கு முதல் ஐபிஎல் சதம் ஆகும்.

இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் இளம் வயதில் சதம் அடித்த 6வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

மொத்தம் 65 பந்துகளை எதிர்கொண்ட பிரப்சிம்ரன் சிங், 6 சிக்ஸர் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 103 ஓட்டங்கள் குவித்தார்.

பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்கள் குவித்தது. இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

பிரப்சிம்ரன் சிங்/Prabhsimran Singh @PunjabKingsIPL (Twitter)



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.