நாடு கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான உக்ரேனிய குழந்தைகள்..போப் ஆண்டவரிடம் கோரிக்கை வைத்த ஜனாதிபதி


உக்ரேனிய மக்களுக்காக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, இத்தாலியில் செர்ஜியோ மற்றும் போப் பிரான்சிஸ் ஆகியோரை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

இத்தாலி பயணம்

ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் நிலையில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இத்தாலி நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு அந்நாட்டின் பிரதமர் செர்ஜியோ மட்டரெல்லா மற்றும் போப் பிரான்சிஸை ரோம் நகரில் சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜெலென்ஸ்கி-செர்ஜியோ/Zelenskyy-Sergio

ஜெலென்ஸ்கி-செர்ஜியோ/Zelenskyy-Sergio  STRINGER/Ukrainian Presidential Press Service/AFP

போப் பிரான்ஸிடம் கோரிக்கை

போப் உடனான சந்திப்பு குறித்து ஜெலென்ஸ்கி கூறுகையில், ‘நான் போப் பிரான்சிஸை சந்தித்தேன். மில்லியன் கணக்கான உக்ரேனியர்களின் சோகத்திற்கு அவர் தனிப்பட்ட கவனம் செலுத்தியதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

நாடு கடத்தப்பட்ட பல்லாயிரக்கணக்கான உக்ரேனிய குழந்தைகளைப் பற்றி நான் பேசினேன்.

அவர்களை வீடு திரும்பி செய்ய எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும். கூடுதலாக, உக்ரைனில் நடக்கும் ரஷ்ய குற்றங்களைக் கண்டிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

ஏனெனில் பாதிக்கப்பட்டவருக்கும், ஆக்கிரமிப்பவருக்கும் இடையில் சமத்துவம் இருக்க முடியாது.

ஒரு நியாயமான அமைதியை அடைவதற்கான ஒரே பயனுள்ள வழிமுறையாக நமது அமைதி பார்முலா பற்றியும் பேசினேன். நான் அதை செயல்படுத்த முன்மொழிந்தேன்’ என தெரிவித்துள்ளார். 

போப் பிரான்சிஸ்-ஜெலென்ஸ்கி/Pope Francis-Zelenskyy Image: AP

ஜெலென்ஸ்கி-ஜியார்ஜியா மெலோனி/Zelenskyy-Giorgia Meloni Image: STRINGER / AFP

     



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.