கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி
வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்து
கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் அரணையூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான் கூறியது; கர்நாடக மக்களுக்கு ஆட்சி மாற்றம் தேவை என்று நினைத்து காங்கிரசுக்கு வாக்கு செலுத்தி வெற்றி பெற வைத்துள்ளனர். பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகள் மாறி மாறி அங்கு ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன.
தமிழ்நாட்டுக்கு எந்த நலனும் இல்லை
தேசிய கட்சி என்று சொல்லிக்கொண்டாலும் அந்த மாநில நலனுக்காக மட்டும்தான் முக்கியத்துவம் தர போகின்றன. அதனால் தமிழ்நாட்டுக்கு எந்த நலனும் இருக்க போறதில்லை. இரு கட்சிகளும் காவிரி உரிமையில் தமிழ்நாட்டுக்கு எதிராகத்தான் இருப்பார்கள். மேகதாது அணையை கட்டுவதிலும் மும்முரம் காட்டுவார்கள். இரு கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையில் மேகதாது அணையை கட்ட நிதி ஒதுக்கியுள்ளார்கள். என்னை பொறுத்தவரை கர்நாடகாவில் காங்கிரஸ் பாஜக வெற்றி பெற்றாலும் தோல்வி பெற்றாலும் ஒண்ணுதான் என சீமான் கூறினார்.
அமைச்சர்கள் மாற்றம்
திமுக அமைச்சர்கள் இலாகா மாற்றம் குறித்து கருத்து தெரிவித்த சீமான், அதிகாரம் அவர்களிடம் இருக்கிறது எனவே அவர்களுக்கு தகுந்தாற்போல காய் நகர்த்துகின்றனர். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேர்மையானவர். காசு கொடுக்காமல் வெற்றி பெற்ற வேட்பாளர். அவரது ஆடியோ மூலமாகத்தான் திமுக சொத்து விவகாரம் வெளியில் வந்தது என்பது முட்டாள்தனம். திமுகவினரின் சொத்து மதிப்பு எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றார்.
விஜய் அரசியல்
நடிகர் விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதற்கு கருத்து தெரிவித்த சீமான், செல்லூர் ராஜு சொல்லித்தான் விஜய் அரசியலுக்கு வர போகிறாரா? விஜய் அரசியலுக்கு வரலாம். வந்தால் நாங்கள் வாழ்த்து தெரிவிப்போம். கமல்ஹாசனுக்கு அப்படிதான் வாழ்த்து தெரிவித்தோம். ஆதரவு நிலைப்பாடு எதுவும் கிடையாது.
மண் சோறு
எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளுக்கு மூத்த தலைவர் வளர்மதி உள்ளிட்டோர் மண் சோறு சாப்பிட்டதை குறித்து பேசிய சீமான், உலகத்தில் முதன்முதல் பண்பட்ட இனம் அறிவார்ந்த தமிழ் சமூகம் அவ்வாறு செய்ய கூடாது. அதை வெளியில் இருந்து பார்ப்பவர்கள் நாகரிகம் இல்லாத கூட்டம் இன்னமும் இருக்கிறது என்று ஏளனம் செய்வார்கள். தலைவர்கள் இப்படி செய்ய கூடாது. மற்றவர்களுக்கு முன் மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டும். தட்டில் சோறு சாப்பிட்டாலே வராத நோய்கள் எல்லாம் வருகிறது. இதில், தரையில் சோறு போட்டு சாப்பிட்டால் என்ன ஆகும் என்ன நினைத்து பார்க்க வேண்டும் என்றார்.
ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு குறித்து கேட்டதற்கு, அது வெறும் சந்திப்பு தான். கூட்டணி என்று நாம் எடுத்துக்கொள்ள கூடாது. நான்கூட மதிப்பு ரீதியாக டிடிவி தினகரனை சந்தித்துள்ளேன் என்று சீமான் கூறினார்.
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் வென்று முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 64 இடங்களில் உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் சுமார் 1.22 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் கர்நாடகாவில் முதல்வர் யார் என்பதை குறித்து உயர் மட்ட ஆலோசனைகளுக்கு பிறகு தெரிய வரும்.