பண்டஸ்லிகா தொடரில் பாயெர்ன் முனிச் அணி 6-0 என்ற கோல் கணக்கில் ஸ்சால்கெ (Schalke) அணியை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றி பெற்றது.
பண்டஸ்லிகா தொடர்
Allianz Arena மைதானத்தில் நடந்த பண்டஸ்லிகா தொடரில் பாயெர்ன் முனிச் மற்றும் ஸ்சால்கெ அணிகள் மோதின. ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் பாயெர்ன் அணியின் தாமஸ் முல்லர் மிரட்டலாக கோல் அடித்தார்.
அவரைத் தொடர்ந்து, கிம்மிக் பெனால்டி வாய்ப்பில் ஆவேசமாக கோல் அடித்தார். இதன்மூலம் பாயெர்ன் முனிச் அணி 2-0 என முதல் பாதியில் முன்னிலை வகித்தது.
@FCBayernEN (Twitter)
இரண்டாம் பாதியில் மிரட்டல் ஆட்டம்
அதன் பின்னரான இரண்டாம் பாதியில் பாயெர்ன் அணியின் ஆட்டத்தில் அனல் பறந்தது. செர்கே ஞார்பி 50 மற்றும் 65வது நிமிடங்களில் கோல்கள் அடித்து மிரட்டினார். இதன் அதிர்ச்சியில் இருந்து ஸ்சால்கெ அணி மீள்வதற்குள் 80வது நிமிடத்தில் பாயெர்னின் மதியஸ் டெல் கோல் அடித்தார்.
Alexander Hassenstein/Getty Images
அடுத்த 12 நிமிடங்களில் (90+2) பாயெர்ன் முனிச் வீரர் Noussair Mazraoui கால்களில் வித்தை காட்டி கோல் அடித்தார். இறுதிவரை ஸ்சால்கெ அணியால் கோல் அடிக்க முடியாததால் பாயெர்ன் அணி 6-0 என இமாலய வெற்றி பெற்றது.
@FCBayernEN (Twitter)
பயிற்சியாளர் கூறிய வார்த்தைகள்
இந்தப் போட்டியின் முதல் பாதி முடிந்தபோது, இடைவெளியில் விளையாட்டு இயக்குனர் ஹசன் சலிஹாமிட்ஜிக் பாயெர்ன் வீரர் ஞார்பியிடம் கூறிய விடயத்தை பகிர்ந்துள்ளார். அவர், ‘நான் பாதி நேரத்தில் அவரிடம் கூறினேன்: நீங்கள் ஸ்கோர் செய்யவில்லை என்றால் டிரஸ்ஸிங் அறைக்குள் வர வேண்டாம்.
அதன் பின் அவர் 2 கோல்கள் அடித்தார். முதல் பாதியில் அவர் தன்னம்பிக்கையுடன் இருப்பதை நீங்கள் பார்க்கலாம், கடந்த சில வாரங்களில் அவர் அதில் பலன் பெற்றார். ஒரு ஸ்ட்ரைக்கருக்கு கோல்கள் நல்லது’ என கூறியுள்ளார்.
@FCBayernEN (Twitter)