லிஸ்பன், தென் ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில், 18 வயதுக்கு மேற்பட்ட நீண்டநாள் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவரை கருணைக் கொலை செய்வதற்கு அனுமதிக்கும் சட்டத்துக்கு விரைவில் அங்கீகாரம் வழங்கப்பட உள்ளது.
நீண்ட காலமாக நோயால் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்டோரை கருணை அடிப்படையில் கொலை செய்வது தொடர்பாக உலகெங்கும் பேசப்படுகிறது.
ஜெர்மனி உட்பட சில ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே இதற்கு சட்டப் பூர்வமான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென் ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில், கருணைக் கொலை செய்வதற்கு அனுமதி அளிக்கும் மசோதா பார்லிமென்டில் நேற்று முன்தினம் நிறைவேறியது.
கருணை கொலைக்கு, கத்தோலிக மதத்தை தீவிரமாக பின்பற்றும் அந்த நாட்டின் அதிபர் மார்சலோ கோபலோ டிசோசா எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் நான்கு முறை பார்லிமென்டில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இருப்பினும், அரசியல் சாசனம் தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி, இதை சட்டமாக்க அதிபர் மறுத்து வந்தார்.
தற்போது அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வகையில், மசோதா திருத்தம் செய்யப்பட்டு பார்லிமென்டில் நிறைவேறியுள்ளது. அதனால், இதை நிராகரிக்க முடியாத நிலையில் அதிபர் உள்ளார்.
ஒரு வாரத்துக்குள் இதை சட்டமாக அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement